| 1 | கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 2 | தேவாதி தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 3 | கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 4 | ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 5 | வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 6 | தேவன் கடலின்மேல் உலர்ந்த தரையை உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 7 | தேவன் பெரிய ஒளிகளை (சூரிய, சந்திர, நட்சத்திரங்களை) உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 8 | தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 9 | தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்கலையும் உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 10 | எகிப்தில் முதற்பேறான ஆண்களையும் விலங்குகளையும் தேவன் கொன்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 11 | தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 12 | தேவன் அவரது மிகுந்த வல்லமையையும், பெலத்தையும் காட்டினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 13 | தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 14 | தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 15 | தேவன் செங்கடலில் பார்வோனையும் அவனது படையையும் அமிழ்த்தினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 16 | தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 17 | தேவன் வல்லமையுள்ள அரசர்களைத் தோற் கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 18 | தேவன் பலமுள்ள அரசர்களைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 19 | தேவன் எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 20 | தேவன் பாஷானின் அரசனாகிய ஓகைத் தோற் கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 21 | தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 22 | இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 23 | நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 24 | தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 25 | தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |
| 26 | பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். |