வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 113

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்! கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
2கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
3சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
4எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர். வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
5எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை. தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
6வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம் தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
7தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார். குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
8அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார். அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
9ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாகுவார். கர்த்தரைத் துதியுங்கள்!
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.