வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 114

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான். யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான்.
2யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள். இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது.
3செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று. யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று.
4ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின. ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின.
5செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்? யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்?
6மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்? மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?
7யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே பூமி நடுங்கி அதிர்ந்தது.
8கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார். கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.