1 | கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. | ரோம 1:9 2கொரி 1:23 2கொரி 11:31 2கொரி 12:19 கலா 1:20 பிலிப் 1:8 1தெச 2:5 1தீமோ 2:7 1தீமோ 5:21 |
2 | உள்ளத்தில் உனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு. | ரோம 10:1 1சாமு 15:35 சங் 119:136 ஏசா 66:10 எரே 9:1 எரே 13:17 புலம் 1:12 புலம் 3:48 புலம் 3:49 புலம் 3:51 எசே 9:4 லூக் 19:41-44 பிலிப் 3:18 வெளிப் 11:3 |
3 | என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். | யாத் 32:32 |
4 | அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்: அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. | ரோம 9:6 ஆதி 32:28 யாத் 19:3-6 உபா 7:6 சங் 73:1 ஏசா 41:8 ஏசா 46:3 யோவா 1:47 |
5 | குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்: மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்: என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென். | ரோம 11:28 உபா 10:15 |
6 | கடவுளின் வார்த்தை நிறைவேறவில்லை என்பது என் கருத்து அல்ல. ஏனெனில், இஸ்ரயேல் இனத்தில் தோன்றியதனாலேயே அவ்வினத்தில் பிறந்த அனைவரும் இஸ்ரயேலர் ஆகிவிட மாட்டார்கள். | ரோம 3:3 ரோம 11:1 ரோம 11:2 எண் 23:19 ஏசா 55:11 மத் 24:35 யோவா 10:35 2தீமோ 2:13 எபிரெ 6:17 எபிரெ 6:18 |
7 | அவ்வாறே, ஆபிரகாமின் மரபில் தோன்றியவர்கள் அனைவருமே அவருடைய பிள்ளைகள் ஆகிவிடமாட்டார்கள்: ஏனெனில், “ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது. | லூக் 3:8 லூக் 16:24 லூக் 16:25 லூக் 16:30 யோவா 8:37-39 பிலிப் 3:3 |
8 | அதாவது இயல்பான முறைப்படி பிறந்த பிள்ளைகளல்ல, வாக்குறுதியின் மூலம் பிறந்த பிள்ளைகளே கடவுளின் பிள்ளைகளாகவும் ஆபிரகாமின் வழிமரபினர்களாகவும் கருதப்படுகின்றனர். | ரோம 4:11-16 கலா 4:22-31 |
9 | “குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் உன்னிடம் வருவேன்: அப்போது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்பதே அந்த வாக்குறுதி. | ஆதி 17:21 ஆதி 18:10 ஆதி 18:14 ஆதி 21:2 |
10 | அது மட்டும் அல்ல, நம் மூதாதையாகிய ஈசாக்கு என்னும் ஒரே மனிதர் மூலமாக ரெபெக்கா குழந்தைகளைப் பெற்றார். | ரோம 5:3 ரோம 5:11 லூக் 16:26 |
11 | குழந்தைகள் பிறக்குமுன்பே, அவர்கள் நன்மையோ, தீமையோ செய்யுமுன்பே, “மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்” என்று அவருக்குச் சொல்லப்பட்டது. | ரோம 4:17 சங் 51:5 எபே 2:3 |
12 | அவ்வாறே, “யாக்கோபுக்கு அன்றோ நான் அன்புகாட்டினேன். ஆனால் ஏசாவை வெறுத்தேன்” என்றும் மறைநூலில் எழுதியுள்ளது. | ஆதி 25:22 ஆதி 25:23 2சாமு 8:14 1இரா 22:47 |
13 | இதிலிருந்து கடவுள் மனிதரைத் தேர்ந்தெடுத்துத் தம் திட்டத்தை நிறைவேற்றுகிறார் என்பது தெளிவாகிறது. இத்திட்டம் மனிதர் செய்யும் செயல்களின்படியன்றி, அழைக்கும் கடவுளுடைய செயலின்படியே நிறைவேறுகிறது என்பதும் தெளிவாகின்றது. | மல்கி 1:2 மல்கி 1:3 |
14 | அப்படியானால் என்ன சொல்வோம்? கடவுள் நேர்மையற்றவரா? ஒருபோதும் இல்லை. | ரோம 3:1 ரோம 3:5 |
15 | ஏனெனில், அவரே மோசேயிடம், “யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்: யார் யாருக்குப் பரிவுகாட்ட விரும்புகிறேனா, அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன்” என்றார். | ரோம 9:16 ரோம 9:18 ரோம 9:19 யாத் 33:19 யாத் 34:6 யாத் 34:7 ஏசா 27:11 மீகா 7:18 |
16 | ஆகவே, மனிதர் விரும்புவதாலோ உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை: கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது. | ரோம 9:11 ஆதி 27:1-4 ஆதி 27:9-14 சங் 110:3 ஏசா 65:1 மத் 11:25 மத் 11:26 லூக் 10:21 யோவா 1:12 யோவா 1:13 யோவா 3:8 1கொரி 1:26-31 எபே 2:4 எபே 2:5 பிலிப் 2:13 2தெச 2:13 2தெச 2:14 தீத் 3:3-5 யாக் 1:18 1பேது 2:9 1பேது 2:10 |
17 | பார்வோனுக்கு மறைநூல் கூறுவதும் இதுவே: “உன் வழியாய் என் வல்லமையைக் காண்பிக்கவும் என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே நான் உன்னை நிலைக்கச் செய்தேன்.” | ரோம 11:4 கலா 3:8 கலா 3:22 கலா 4:30 |
18 | ஆகவே, கடவுள் தாம் விரும்புவது போலச் சிலருக்கு இரக்கம் காட்டுகிறார்: வேறு சிலரைக் கடின உள்ளத்தினர் ஆக்குகிறார். | ரோம 9:15 ரோம 9:16 ரோம 5:20 ரோம 5:21 எபே 1:6 |
19 | “அப்படியானால், கடவுள் மனிதர் மீது எப்படிக் குற்றம் சுமத்தமுடியும்? அவருடைய விருப்பத்தை யாரும் எதிர்க்க முடியாதல்லவா?” என்று நீங்கள் கேட்கலாம். | ரோம 3:8 1கொரி 15:12 1கொரி 15:35 யாக் 1:13 |
20 | மனிதர்களே! கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்? உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கியவரிடம், “ஏன் என்னை இவ்வாறு செய்தாய்?” எனக் கேட்குமோ? | ரோம 2:1 மீகா 6:8 1கொரி 7:16 யாக் 2:20 |
21 | ஒரே களிமண்ணைப் பிசைந்து மதிப்புள்ள கலனையோ மதிப்பற்ற கலனையோ வனையக் குயவனுக்கு உரிமை இல்லையா? | ரோம 9:11 ரோம 9:18 நீதி 16:4 ஏசா 64:8 எரே 18:3-6 |
22 | தமது சினத்தைக் காட்டவும் தமது வல்லமையை விளங்கச் செய்யவும் கடவுள் விரும்பியபோதிலும், அழிவுக்கும் அவருடைய சினத்துக்கும் இலக்கான கலன்களைப் பொறுத்தவரையில் அவர் மிக்க பொறுமை காட்டினாராயின், யார் என்ன சொல்ல முடியும்? | ரோம 9:17 ரோம 1:18 ரோம 2:4 ரோம 2:5 யாத் 9:16 சங் 90:11 நீதி 16:4 வெளிப் 6:16 வெளிப் 6:17 |
23 | அவரது இரக்கத்திற்கு உரித்தான கலன்கள் மாட்சி பெறவேண்டும் என்று முன்னேற்பாடு செய்திருந்தார். அக்கலன்களைப் பொறுத்தவரை அவர் தமது அளவற்ற மாட்சியை வெளிப்படுத்த விரும்பினார். | ரோம 2:4 ரோம 5:20 ரோம 5:21 எபே 1:6-8 எபே 1:18-8 எபே 2:4 எபே 2:7 எபே 2:10 எபே 3:8 எபே 3:16 கொலோ 1:27 2தெச 1:10-12 |
24 | யூதர்கள் நடுவிலிருந்து மட்டுமன்றி, யூதரல்லாதார் நடுவிலிருந்தும் அவரால் அழைக்கப்பட்ட நாமே அந்தக் கலன்கள். | ரோம 8:28-30 1கொரி 1:9 எபிரெ 3:1 1பேது 5:10 வெளிப் 19:9 |
25 | அவ்வாறே, “என் மக்கள் அல்லாதோரை நோக்கி என் மக்கள் நீங்கள் என அழைப்பேன்: கருணைப் பெறாதோருக்குக் கருணை காட்டுவேன்” என்று ஓசேயா நூலில் எழுதப்பட்டுள்ளது அன்றோ! | ஓசி 1:1 ஓசி 1:2 |
26 | “நீங்கள் என்னுடைய மக்கள் அல்ல” என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு மாறாக, “வாழும் கடவுளின் மக்கள்” என்று அவர்களுக்குக் கூறப்படும் என்றும் அதில் எழுதியுள்ளது. | ஓசி 1:9 ஓசி 1:10 |
27 | “இஸ்ரயேலே, உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும் அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பிவருவர்: | ஏசா 1:1 |
28 | காலம் தாழ்த்தாமல் ஆண்டவர் தாம் தீர்மானித்தபடியே நாடு முழுவதிலும் அனைத்தையும் செய்வார்” என்றும் எசாயா இஸ்ரயேல் மக்களைக் குறித்துக் கூறியுள்ளார். | ஏசா 28:22 ஏசா 30:12-14 தானி 9:26 தானி 9:27 மத் 24:21 |
29 | “படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும் எஞ்சியிருக்கச் செய்யாவிடில் சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம்: கொமோராவுக்கு ஒப்பாகியிருப்போம்” என்றும் எசாயா முன்னுரைத்துள்ளார். | ஏசா 1:9 ஏசா 6:13 புலம் 3:22 |
30 | அப்படியானால் என்ன சொல்வோம்? பிற இனத்தார் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவதற்காக முயற்சி செய்யாத போதிலும் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டார்கள். அப்படி ஆக்கப்பட்டது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையால்தான். | ரோம 9:14 ரோம 3:5 |
31 | ஆனால், கடவுளுக்கு ஏற்புடையவர்களாகுமாறு இஸ்ரயேல் மக்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க முயற்சி செய்த போதிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை. | ரோம 9:30-32 ரோம 10:2-4 கலா 3:21 பிலிப் 3:6 |
32 | இதன் காரணம் என்ன? அவர்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல் செயல்களின் அடிப்படையில் முயற்சி செய்தார்கள். எனவே “தடைக்கல்லின் மேல்” தடுக்கி விழுந்தனர். | ரோம 4:16 ரோம 10:3 மத் 19:16-20 யோவா 6:27-29 அப் 16:30-34 1யோவா 5:9-12 |
33 | இதைப்பற்றியே, “இதோ தடுக்கி விழச்செய்யும் கற்பாறையையும் இடறச்செய்யும் கல்லையும் சீயோனில் வைக்கிறேன். அதன்மேல் நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்குள்ளாக மாட்டார்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. | சங் 118:22 ஏசா 8:14 ஏசா 8:15 ஏசா 28:16 மத் 21:42 மத் 21:44 1பேது 2:7 1பேது 2:8 |