ஆதியாகமம் 27:9-14 - WCV
9
உடனே மந்தைக்குப் போ, அங்கிருந்து இரு நல்ல வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டு வா.நான் அவற்றை உன் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சுவையான உணவு வகைகளாகச் சமைத்துத் தருவேன்.
10
நீ அவற்றை உன் தந்தைக்கு உண்ணக் கொடுத்து அவர் சாவதற்கு முன் அவர் ஆசியைப் பெற்றுக்கொள்” என்றார்.
11
யாக்கோபு தன் தாய் ரெபேக்காவிடம், “என் சகோதரன் ஏசா உடலில் அடர்ந்த உரோமம் உடையவன்: நானோ மிருதுவான உடல் கொண்டவன்.
12
என் தந்தை என்னைத் தடவிப் பார்த்தால் என்ன ஆவது? அவரை நான் ஏமாற்றுவதாகத் தெரிந்துவிட்டால், என்மேல் ஆசிக்குப் பதிலாக சாபத்தையல்லவா விழச் செய்துகொள்வேன்” என்றான்.
13
ஆனால் அவன் தாய் அவனிடம், “மகனே! உனக்குரிய சாபம் என்மேல் விழட்டும்: நான் சொல்வதை மட்டும் செய்: போ: அவற்றை என்னிடம் கொண்டு வா” என்றார்.
14
அவனும் அவ்வாறே போய் அவற்றைப் பிடித்துத் தன் தாயிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர் அவன் தந்தைக்கு விருப்பமான சுவையுள்ள உணவு வகைகளைத் தயாரித்தார்.