| 1 | பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. | வெளிப் 21:5 ஏசா 65:17-19 ஏசா 66:22 2பேது 3:13 |
| 2 | யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. | வெளிப் 1:1 வெளிப் 1:4 வெளிப் 1:9 |
| 3 | மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். | வெளிப் 10:4 வெளிப் 10:8 வெளிப் 12:10 |
| 4 | அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. | வெளிப் 7:17 ஏசா 25:8 |
| 5 | சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாத்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். | வெளிப் 4:2 வெளிப் 4:9 வெளிப் 5:1 வெளிப் 20:11 |
| 6 | அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். | வெளிப் 16:17 |
| 7 | ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான். | வெளிப் 2:11 வெளிப் 2:17 வெளிப் 2:25 |
| 8 | பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். | உபா 20:8 நியா 7:3 ஏசா 51:12 ஏசா 57:11 மத் 8:26 மத் 10:28 லூக் 12:4-9 யோவா 12:42 யோவா 12:43 1பேது 3:14 1பேது 3:15 1யோவா 5:4 1யோவா 5:5 1யோவா 5:10 |
| 9 | பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, | வெளிப் 15:1-7 வெளிப் 16:1-17 |
| 10 | பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். | வெளிப் 1:10 வெளிப் 4:2 வெளிப் 17:3 1இரா 18:12 2இரா 2:16 எசே 3:14 எசே 8:3 எசே 11:1 எசே 11:24 எசே 40:1-3 அப் 8:39 2கொரி 12:2-4 |
| 11 | அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது. | வெளிப் 21:22 வெளிப் 21:23 வெளிப் 22:5 ஏசா 4:5 ஏசா 60:1 ஏசா 60:2 ஏசா 60:19 ஏசா 60:20 எசே 48:35 |
| 12 | அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. | வெளிப் 21:17-20 எஸ்றா 9:9 நெகே 12:27 சங் 51:18 சங் 122:7 |
| 13 | வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. | எசே 48:31-34 |
| 14 | நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன. | வெளிப் 21:19-21 ஏசா 54:11 எபிரெ 11:10 |
| 15 | என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான். | வெளிப் 11:1 வெளிப் 11:2 யாத் 40:3-5 எசே 41:1-5 சகரி 2:1 |
| 16 | அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது. | எசே 48:17 எசே 48:18 எசே 48:20 எசே 48:35 |
| 17 | அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது. | வெளிப் 7:4 வெளிப் 14:3 |
| 18 | அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது. | வெளிப் 21:11 வெளிப் 21:19 |
| 19 | நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், | யோபு 28:16-19 நீதி 3:15 ஏசா 54:11 ஏசா 54:12 |
| 20 | ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே. | வெளிப் 21:20 |
| 21 | பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது. | வெளிப் 21:12 வெளிப் 17:4 மத் 13:45 மத் 13:46 |
| 22 | அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். | வெளிப் 21:4 வெளிப் 21:5 1இரா 8:27 2நாளா 2:6 2நாளா 6:18 ஏசா 66:1 யோவா 4:23 |
| 23 | நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. | வெளிப் 21:11 வெளிப் 22:5 ஏசா 24:23 ஏசா 60:19 ஏசா 60:20 |
| 24 | இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். | வெளிப் 22:2 உபா 32:43 சங் 22:27 ஏசா 2:2 ஏசா 52:15 ஏசா 55:5 ஏசா 55:10 ஏசா 66:12 ஏசா 66:18 எரே 4:2 சகரி 2:11 சகரி 8:22 சகரி 8:23 ரோம 15:10-12 ரோம 15:16-12 ரோம 15:26-12 |
| 25 | அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை. | ஏசா 60:11 |
| 26 | உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். | வெளிப் 21:24 |
| 27 | தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள். | லேவி 13:46 எண் 5:3 எண் 12:15 சங் 101:8 ஏசா 35:8 ஏசா 52:1 ஏசா 60:21 யோவே 3:17 மத் 13:41 1கொரி 6:9 1கொரி 6:10 கலா 5:19-21 எபே 5:5 எபிரெ 12:14 |