| 1 | பார்வோன் காத்சாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்: | யாத் 25:15-17 ஆமோ 1:6-8 செப் 2:4-7 சகரி 9:5-7 |
| 2 | கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, வடக்கேயிருந்து ஜலம் பொங்கி பிரவாகமாகித் தேசத்தின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும், நகரத்தின்மேலும், அதில் குடியிருக்கிறவர்களின்மேலும் புரண்டு ஓடும்; அப்பொழுது மனுஷர் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லாரும் அலறுவார்கள். | எரே 46:7 எரே 46:8 ஏசா 8:7 ஏசா 8:8 ஏசா 28:17 ஏசா 59:19 தானி 11:22 ஆமோ 9:5 ஆமோ 9:6 நாகூ 1:8 வெளிப் 12:15 வெளிப் 12:16 வெளிப் 17:1 வெளிப் 17:15 |
| 3 | அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள். | எரே 8:16 எரே 46:9 நியா 5:22 யோபு 39:19-25 எசே 26:10 எசே 26:11 நாகூ 2:4 நாகூ 3:2 நாகூ 3:3 |
| 4 | பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும், மீதியான சகாயரையெல்லாம் சங்காரம் பண்ணவும் வருகிற நாளிலே இப்படியாகும்; கப்தோர் என்னும் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் கர்த்தர் பாழாக்குவார். | எரே 46:10 சங் 37:13 ஏசா 10:3 எசே 7:5-7 எசே 7:12-7 எசே 21:25 எசே 21:29 ஓசி 9:7 லூக் 21:22 |
| 5 | காத்சா மொட்டையடிக்கப்படும்; அவர்களுடய பள்ளத்தாக்கிலே மீதியாகிய அஸ்கலோன் சங்காரமாகும்; நீ எந்தமட்டுந்தான் உன்னைக் கீறிக்கொள்ளுவாய். | எரே 48:37 ஏசா 15:2 எசே 7:18 மீகா 1:16 |
| 6 | ஆ கர்த்தரின் பட்டயமே, எந்தமட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு. | எரே 12:12 எரே 15:3 எரே 25:27 எரே 51:20-23 உபா 32:41 உபா 32:42 சங் 17:13 ஏசா 10:5 ஏசா 10:15 எசே 14:17 எசே 21:3-5 |
| 7 | அது எப்படி அமர்ந்திருக்கும்? அஸ்கலோனுக்கு விரோதமாகவும் கடல்துறை தேசத்துக்கு விரோதமாகவும் கர்த்தர் அதற்குக் கட்டளைகொடுத்து, அவ்விடங்களுக்கென்று அதைக் குறித்தாரே. | 1சாமு 15:3 ஏசா 10:6 ஏசா 13:3 ஏசா 37:26 ஏசா 45:1-3 ஏசா 46:10 ஏசா 46:11 எசே 14:17 ஆமோ 3:6 |