| 1 | பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய சர்வசேனையும், அவன் ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல ராஜ்யங்களும், சகல ஜனங்களும் எருசலேமுக்கும் அதைச் சேர்ந்த சகல பட்டணங்களுக்கும் விரோதமாக யுத்தம்பண்ணுகையில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை: | எரே 34:7 எரே 32:2 எரே 39:1-3 எரே 52:4-11 2இரா 25:1-9 2நாளா 36:12-17 |
| 2 | இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான். | எரே 22:1 எரே 22:2 எரே 37:1-4 2நாளா 36:11 2நாளா 36:12 |
| 3 | நீ அவன் கைக்குத் தப்பிப்போகாமல், நிச்சயமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்; உன் கண்கள் பாபிலோன் ராஜாவின் கண்களைக் காணும்; அவன் வாய் உன் வாயோடே பேசும்; நீ பாபிலோனுக்குப் போவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 34:21 எரே 21:7 எரே 32:4 எரே 37:17 எரே 38:18 எரே 39:4 எரே 39:5 எரே 52:7-9 2இரா 25:4 2இரா 25:5 |
| 4 | ஆகிலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; உன்னைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தாலே சாவதில்லை. |
| 5 | சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார். | 2இரா 22:20 2நாளா 34:28 எசே 17:16 |
| 6 | இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான். | 1சாமு 3:18 1சாமு 15:16-24 2சாமு 12:7-12 1இரா 21:19 1இரா 22:14 எசே 2:7 மத் 14:4 அப் 20:27 |
| 7 | அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும், யூதாவின் எல்லாப் பட்டணங்களிலும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள். | எரே 34:1 எரே 4:5 எரே 8:14 எரே 11:12 உபா 28:52 |
| 8 | ஒருவனும் யூதஜாதியானாகிய தன் சகோதரனை அடிமை கொள்ளாதபடிக்கு, அவனவன் எபிரெயனாகிய தன் வேலைக்காரனையும், எபிரெய ஸ்திரீயாகிய தன் வேலைக்காரியையும் சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று அவர்களுக்கு விடுதலையைக் கூறும்படி, | 2இரா 11:17 2இரா 23:2 2இரா 23:3 2நாளா 15:12-15 2நாளா 23:16 2நாளா 29:10 2நாளா 34:30-33 நெகே 9:38 நெகே 10:1-27 |
| 9 | ராஜாவாகிய சிதேக்கியா எருசலேமில் இருக்கிற எல்லா ஜனத்தோடும் உடன்படிக்கை பண்ணினபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் வார்த்தை உண்டாயிற்று. | ஆதி 14:13 ஆதி 40:15 யாத் 2:6 யாத் 3:18 உபா 15:12 1சாமு 4:6 1சாமு 4:9 1சாமு 14:11 2கொரி 11:22 பிலிப் 3:5 |
| 10 | ஒவ்வொருவனும் தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் இனி அடிமைகொள்ளாதபடிக்கு, சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் கேட்டபோது, செவிகொடுத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள். | எரே 26:10 எரே 26:16 எரே 36:12 எரே 36:24 எரே 36:25 எரே 38:4 |
| 11 | ஆனாலும் அதற்குப்பின்பு அவர்கள் மாறாட்டம்பண்ணி, தாங்கள் சுயாதீனராக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரியையும் மறுபடியும் அழைப்பித்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்திக்கொண்டார்கள். | எரே 34:21 எரே 37:5 யாத் 8:8 யாத் 8:15 யாத் 9:28 யாத் 9:34 யாத் 9:35 யாத் 10:17-20 யாத் 14:3-9 1சாமு 19:6-11 1சாமு 24:19 1சாமு 26:21 சங் 36:3 சங் 78:34-36 சங் 125:5 நீதி 26:11 பிரச 8:11 ஓசி 6:4 ஓசி 7:16 செப் 1:6 மத் 12:43-45 ரோம 2:4 ரோம 2:5 2பேது 2:20-22 |
| 12 | ஆதலால், கர்த்தராலே எரேமியாவுக்கு வார்த்தை உண்டாகி, அவர்: |
| 13 | இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அவனவன் தனக்கு விற்கப்பட்ட எபிரெயனாகிய தன் சகோதரனை முடிவிலே நீங்கள் ஏழாம் வருஷத்திலே அனுப்பிவிடவேண்டும் என்றும், அவன் உனக்கு ஆறுவருஷம் அடிமையாயிருந்தபின்பு, அவனை உன்னிடத்தில் வைக்காமல் சுயாதீனனாக அனுப்பிவிடவேண்டும் என்றும், | எரே 31:32 யாத் 24:3 யாத் 24:7 யாத் 24:8 உபா 5:2 உபா 5:3 உபா 5:27 உபா 29:1 எபிரெ 8:10 எபிரெ 8:11 |
| 14 | நான் உங்கள் பிதாக்களை அடிமைவீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணினேன்; ஆனாலும் உங்கள் பிதாக்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போனார்கள். | எரே 34:8 எரே 34:9 யாத் 21:1-4 யாத் 23:10 யாத் 23:11 உபா 15:12 1இரா 9:22 2நாளா 28:10 ஏசா 58:6 ஆமோ 2:6 ஆமோ 8:6 |
| 15 | நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள். | 1இரா 21:27-29 2இரா 10:30 2இரா 10:31 2இரா 12:2 2இரா 14:3 ஏசா 58:2 மத் 15:8 |
| 16 | ஆனாலும் நீங்கள் மாறாட்டம்பண்ணி, என் நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுயாதீனராகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் திரும்ப அழைத்துவந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்தினீர்கள். | எரே 34:11 1சாமு 15:11 எசே 3:20 எசே 18:24 எசே 33:12 எசே 33:13 லூக் 8:13-15 |
| 17 | ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைக் கூறினவிஷயத்தில் என் சொல்லைக் கேளாமற் போனீர்களே; இதோ, நான் உங்களைப் பட்டயத்துக்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்துக்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குக் கூறுகிறேன்; பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | லேவி 26:34 லேவி 26:35 உபா 19:19 நியா 1:6 நியா 1:7 எஸ்தர் 7:10 தானி 6:24 மத் 7:2 லூக் 6:37 லூக் 6:38 கலா 6:7 யாக் 2:13 வெளிப் 16:6 |
| 18 | என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன். | உபா 17:2 யோசு 7:11 யோசு 23:16 ஓசி 6:7 ஓசி 8:1 |
| 19 | கன்றுக்குட்டியின் துண்டுகளின் நடுவே கடந்துபோன யூதாவின் பிரபுக்களையும், எருசலேமின் பிரபுக்களையும், பிரதானிகளையும், ஆசாரியர்களையும், தேசத்தின் சகல ஜனங்களையும் அப்படிச் செய்து, | எரே 34:10 எசே 22:27-31 தானி 9:6 தானி 9:8 தானி 9:12 மீகா 7:1-5 செப் 3:3 செப் 3:4 |
| 20 | நான் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவர்களுடைய பிரேதம் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும். | எரே 4:30 எரே 11:21 எரே 21:7 எரே 22:25 எரே 38:16 எரே 44:30 எரே 49:37 |
| 21 | யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும், உங்களைவிட்டுப் பெயர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன். | எரே 34:3-5 எரே 39:6 எரே 52:10 எரே 52:24-27 2இரா 25:18-21 புலம் 4:20 எசே 17:16 |
| 22 | இதோ, நான் கட்டளைகொடுத்து, அவர்களை இந்த நகரத்துக்குத் திரும்பப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப்பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராதபடிப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். | 2சாமு 16:11 2இரா 24:2 2இரா 24:3 2நாளா 36:17 ஏசா 10:5-7 ஏசா 13:3 ஏசா 37:26 ஏசா 45:1-3 ஆமோ 3:6 மத் 22:7 |