| 1 | கர்த்தர் சொன்னது: நீ யூதா ராஜாவின் அரமனைக்குப் போய், அங்கே சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால்: | எரே 21:11 எரே 34:2 1சாமு 15:16-23 2சாமு 12:1 2சாமு 24:11 2சாமு 24:12 1இரா 21:18-20 2நாளா 19:2 2நாளா 19:3 2நாளா 25:15 2நாளா 25:16 2நாளா 33:10 ஓசி 5:1 ஆமோ 7:13 மாற் 6:18 லூக் 3:19 லூக் 3:20 |
| 2 | தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யூதாவின் ராஜாவே, நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இந்த வாசல்களுக்குள் பிரவேசிக்கிற உம்முடைய ஜனமும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். | எரே 22:29 எரே 13:18 எரே 17:20-27 எரே 19:3 எரே 29:20 1இரா 22:19 ஏசா 1:10 ஏசா 28:14 எசே 34:7 ஆமோ 7:16 |
| 3 | நீங்கள் நியாயமும் நீதியும் செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமைசெய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள். | எரே 5:28 எரே 9:24 எரே 21:12 யாத் 23:6-9 லேவி 19:15 உபா 16:18-20 உபா 25:1 2சாமு 23:3 யோபு 29:7-17 சங் 72:2-4 மீகா 3:11 சகரி 7:9-11 |
| 4 | இந்த வார்த்தையின்படியே நீங்கள் மெய்யாய்ச் செய்வீர்களாகில், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் ஊழியக்காரரும் அவன் ஜனமுமாக இந்த அரமனை வாசல்களின் வழியாய் உட்பிரவேசிப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 17:25 |
| 5 | நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போகும் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 17:27 2நாளா 7:19 2நாளா 7:22 ஏசா 1:20 |
| 6 | யூதா ராஜாவின் அரமனையைக் குறித்துக் கர்த்தர்: நீ எனக்குக் கீலேயாத்தைப்போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருக்கிறாய்; ஆனாலும் மெய்யாகவே நான் உன்னை வனாந்தரத்தைப்போலவும், குடியில்லாத பட்டணங்களைப்போலவும் ஆக்கிவிடுவேன். | எரே 22:24 எரே 21:11 ஆதி 37:25 உபா 3:25 உன்ன 5:15 |
| 7 | சங்காரக்காரரை அவரவர் ஆயுதங்களோடுங்கூட நான் உனக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துவேன்; உன் உச்சிதமான கேதுருக்களை அவர்கள் வெட்டி, அக்கினியிலே போடுவார்கள். | எரே 4:6 எரே 4:7 எரே 5:15 எரே 50:20-23 ஏசா 10:3-7 ஏசா 13:3-5 ஏசா 54:16 ஏசா 54:17 எசே 9:1-7 மத் 22:7 |
| 8 | அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன்தன் அயலானை நோக்கி: இந்தப் பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள். | உபா 29:23-25 1இரா 9:8 1இரா 9:9 2நாளா 7:20-22 புலம் 2:15-17 புலம் 4:12 தானி 9:7 |
| 9 | அதற்குப் பிரதியுத்தரமாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனை செய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்கள் என்று சொல்லுகிறார். | எரே 2:17-19 எரே 40:2 எரே 40:3 எரே 50:7 உபா 29:25-28 2இரா 22:17 2நாளா 34:25 |
| 10 | மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும் வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் ஜனன பூமியைக் காண்பதுமில்லை. | 2இரா 22:20 2இரா 23:30 2நாளா 35:23-25 பிரச 4:2 ஏசா 57:1 புலம் 4:9 லூக் 23:28 |
| 11 | தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லூமைக் குறித்து: அவன் இனி இங்கே திரும்பவராமல், | 1நாளா 3:15 2நாளா 28:12 2நாளா 34:22 2நாளா 36:1-4 |
| 12 | தான் கொண்டுபோகப்பட்ட ஸ்தலத்திலே மரிப்பான்; இந்த தேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 22:18 2இரா 23:34 |
| 13 | தனக்கு விஸ்தாரமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி, | எரே 22:18 2இரா 23:35-37 2நாளா 36:4 |
| 14 | அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல், அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ! | நீதி 17:19 நீதி 24:27 ஏசா 5:8 ஏசா 5:9 ஏசா 9:9 தானி 4:30 மல்கி 1:4 லூக் 14:28 லூக் 14:29 |
| 15 | நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ்செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ? | எரே 22:18 2இரா 23:25 1நாளா 3:15 |
| 16 | அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான், அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 5:28 யோபு 29:12-17 சங் 72:1-4 சங் 72:12-4 சங் 72:13-4 சங் 82:3 சங் 82:4 சங் 109:31 நீதி 24:11 நீதி 24:12 ஏசா 1:17 |
| 17 | உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை. | யோசு 7:21 யோபு 31:7 சங் 119:36 சங் 119:37 எசே 19:6 எசே 33:31 மாற் 7:21 மாற் 7:22 யாக் 1:14 யாக் 1:15 2பேது 2:14 1யோவா 2:15 1யோவா 2:16 |
| 18 | ஆகையால் கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக் குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை. | எரே 22:10 எரே 16:4 எரே 16:6 2நாளா 21:19 2நாளா 21:20 2நாளா 35:25 |
| 19 | ஒரு கழுதை புதைக்கப்படுகிற வண்ணமாய் அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார். | எரே 15:3 எரே 36:6 எரே 36:30 1இரா 14:10 1இரா 21:23 1இரா 21:24 2இரா 9:35 2நாளா 36:6 |
| 20 | லீபனோனின்மேலேறிப் புலம்பு, பாசானில் உரத்த சத்தமிடு, ஆபரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு; உன் நேசர் அனைவரும் முறிந்தார்கள். | எரே 2:36 எரே 2:37 எரே 30:13-15 2இரா 24:7 ஏசா 20:5 ஏசா 20:6 ஏசா 30:1-7 ஏசா 31:1-3 |
| 21 | நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய்; உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம். | எரே 2:31 எரே 6:16 எரே 35:15 எரே 36:21-26 2நாளா 33:10 2நாளா 36:16 2நாளா 36:17 நீதி 30:9 |
| 22 | உன் மேய்ப்பர்கள் எல்லாரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ உன் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நீ வெட்கப்பட்டு இலச்சையடைவாய். | எரே 4:11-13 எரே 30:23 எரே 30:24 ஏசா 64:6 ஓசி 4:19 ஓசி 13:15 |
| 23 | லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளைப்பெறுகிறவளுக்கொத்த வாதையும் உனக்கு வருகையில், நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாயிருப்பாய்! | எரே 22:6 சகரி 11:1 சகரி 11:2 |
| 24 | யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா, என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 22:28 எரே 37:1 2இரா 24:6-8 |
| 25 | உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும், நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன். | எரே 22:28 எரே 21:7 எரே 34:20 எரே 34:21 எரே 38:16 2இரா 24:15 2இரா 24:16 |
| 26 | உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜனனபூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள். | எரே 15:2-4 2இரா 24:15 2நாளா 36:9 2நாளா 36:10 ஏசா 22:17 எசே 19:9-14 |
| 27 | திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை. | எரே 22:11 எரே 44:14 எரே 52:31-34 2இரா 25:27-30 |
| 28 | கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்தசிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாத தேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது? | எரே 48:38 1சாமு 5:3-5 2சாமு 5:21 சங் 31:12 ஓசி 8:8 ஓசி 13:15 ரோம 9:21-23 2தீமோ 2:20 2தீமோ 2:21 |
| 29 | தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள். | எரே 6:19 உபா 4:26 உபா 31:19 உபா 32:1 ஏசா 1:1 ஏசா 1:2 ஏசா 34:1 மீகா 1:2 மீகா 6:1 மீகா 6:2 |
| 30 | இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். | 1நாளா 3:16 1நாளா 3:17 மத் 1:12-16 |