| 1 | சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும், ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி: | எரே 32:1-3 எரே 37:1 எரே 52:1-3 2இரா 24:17 2இரா 24:18 1நாளா 3:15 2நாளா 36:10-13 |
| 2 | நீர் எங்களுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரியும்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எங்களுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்கிறான்; ஒருவேளை கர்த்தர் தம்முடைய எல்லா அற்புதச் செயலின்படியேயும் எங்களுக்கு அநுக்கிரகஞ்செய்து, அவனை எங்களைவிட்டுப் போகப்பண்ணுவார் என்று சொல்லியனுப்பினபோது, | எரே 37:3 எரே 37:7 எரே 38:14-27 எரே 42:4-6 நியா 20:27 1சாமு 10:22 1சாமு 28:6 1சாமு 28:15 1இரா 14:2 1இரா 14:3 1இரா 22:3-8 2இரா 1:3 2இரா 3:11-14 2இரா 22:13 2இரா 22:14 எசே 14:3-7 எசே 20:1-3 |
| 3 | எரேமியா அவர்களைப் பார்த்து, நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது: |
| 4 | இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து, | எரே 32:5 எரே 33:5 எரே 37:8-10 எரே 38:2 எரே 38:3 எரே 38:17 எரே 38:18 எரே 52:18 ஏசா 10:4 ஓசி 9:12 |
| 5 | நான் நீட்டின கையினாலும் பலத்தபுயத்தினாலும் கோபமும் உக்கிரமும் மகா கடுமையுமாக உங்களோடே யுத்தம்பண்ணி, | ஏசா 63:10 புலம் 2:4 புலம் 2:5 |
| 6 | இந்த நகரத்தின் குடிகளையும், மனுஷரையும், மிருகங்களையும் சங்கரிப்பேன்; மகா கொள்ளை நோயால் சாவார்கள். | எரே 7:20 எரே 12:3 எரே 12:4 எரே 33:12 எரே 36:29 ஆதி 6:7 ஏசா 6:11 ஏசா 24:1-6 எசே 14:13 எசே 14:17 எசே 14:19 எசே 14:21 எசே 33:27 எசே 33:29 ஓசி 4:3 மீகா 3:12 செப் 1:3 லூக் 21:24 |
| 7 | அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைப் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான். | எரே 24:8-10 எரே 34:19-22 எரே 37:17 எரே 38:21-23 எரே 39:4-7 எரே 52:8-11 எரே 52:24-27 2இரா 25:5-7 2இரா 25:18-21 2நாளா 36:17-20 எசே 12:12-16 எசே 17:20 எசே 17:21 எசே 21:25 எசே 21:26 |
| 8 | பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | உபா 11:26 உபா 30:15 உபா 30:19 ஏசா 1:19 ஏசா 1:20 |
| 9 | இந்த நகரத்திலே தரிக்கிறவன் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; உங்களை முற்றிக்கைபோடும் கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப்போய்விடுகிறவனோ பிழைப்பான்; அவன் பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல் இருக்கும். | எரே 21:7 எரே 27:13 எரே 38:2 எரே 38:17-23 |
| 10 | என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பானென்று சொல் என்றார். | எரே 44:11 எரே 44:27 லேவி 17:10 லேவி 20:3-5 லேவி 26:17 சங் 34:16 எசே 15:7 ஆமோ 9:4 |
| 11 | யூதா ராஜாவின் குடும்பத்தாரையும் நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். | எரே 13:18 எரே 17:20 மீகா 3:1 |
| 12 | தாவீதின் குடும்பத்தாரே, உங்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் புறப்பட்டு, அவிக்கிறவன் இல்லாமல் எரியாதபடிக்கு, நீங்கள் ஏற்கனவே நியாயங்கேட்டு, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 7:2 ஏசா 7:13 லூக் 1:69 |
| 13 | இதோ, பள்ளத்தாக்கில் வாசம்பண்ணுகிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்றும், எங்கள் வாசஸ்தலங்களுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 21:5 எரே 23:30-32 எரே 50:31 எரே 51:25 யாத் 13:8 யாத் 13:20 |
| 14 | நான் உங்கள் கிரியைகளின் பலனுக்குத்தக்கதாய் உங்களை விசாரிப்பேன்; நான் அதின் காட்டிலே தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள யாவையும் பட்சிக்கும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். | எரே 9:25 எரே 11:22 ஏசா 10:12 ஏசா 24:21 |