| 1 | ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும், | சங் 18:7-15 சங் 144:5 சங் 144:6 மாற் 1:10 |
| 2 | தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும். | ஏசா 37:20 ஏசா 63:12 யாத் 14:4 1சாமு 17:46 1சாமு 17:47 1இரா 8:41-43 சங் 46:10 சங் 67:1 சங் 67:2 சங் 79:10 சங் 83:13 சங் 98:1 சங் 98:2 சங் 102:15 சங் 102:16 சங் 106:8 எசே 38:22 எசே 38:23 எசே 39:27 எசே 39:28 தானி 4:1-3 தானி 4:32-37 தானி 6:25-27 யோவே 3:16 யோவே 3:17 |
| 3 | நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின. | யாத் 34:10 உபா 4:34 உபா 10:21 நியா 5:4 நியா 5:5 2சாமு 7:23 சங் 65:6 சங் 66:3 சங் 66:5 சங் 68:8 சங் 76:12 சங் 105:27-36 சங் 106:22 |
| 4 | தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை. | சங் 31:19 1கொரி 2:9 1கொரி 2:10 எபே 3:5-10 எபே 3:17-21 கொலோ 1:26 கொலோ 1:27 1தீமோ 3:16 1யோவா 3:1 1யோவா 3:2 1யோவா 4:10 வெளிப் 21:1-4 வெளிப் 21:22-24 வெளிப் 22:1-5 |
| 5 | மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம். | யாத் 20:24 யாத் 25:22 யாத் 29:42 யாத் 29:43 யாத் 30:6 எபிரெ 4:16 |
| 6 | நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது. | ஏசா 6:5 ஏசா 53:6 யோபு 14:4 யோபு 15:14-16 யோபு 25:4 யோபு 40:4 யோபு 42:5 யோபு 42:6 சங் 51:5 ரோம 7:18 ரோம 7:24 எபே 2:1 எபே 2:2 தீத் 3:3 |
| 7 | உமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனும், உம்மைப் பற்றிக்கொள்ளும்படிக்கு விழித்துக்கொள்ளுகிறவனும் இல்லை; தேவரீர் உம்முடைய முகத்தை எங்களை விட்டு மறைத்து, எங்கள் அக்கிரமங்களினிமித்தம் எங்களைக் கரையப்பண்ணுகிறீர். | ஏசா 50:2 ஏசா 59:16 சங் 14:4 எசே 22:30 ஓசி 7:7 ஓசி 7:14 |
| 8 | இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. | ஏசா 63:16 யாத் 4:22 உபா 32:6 கலா 3:26 கலா 3:29 |
| 9 | கர்த்தாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய ஜனங்களே. | சங் 6:1 சங் 38:1 சங் 74:1 சங் 74:2 சங் 79:5-9 எரே 10:24 ஆபகூ 3:2 |
| 10 | உமது பரிசுத்த பட்டணங்கள் வனாந்தரமாயின; சீயோன் வனாந்தரமாயிற்று; எருசலேம் பாழாய்க் கிடக்கிறது. | ஏசா 1:7 2இரா 25:9 2நாளா 36:19-21 சங் 79:1-7 புலம் 1:1-4 புலம் 2:4-8 புலம் 5:18 தானி 9:26 தானி 9:27 தானி 12:7 மீகா 3:12 லூக் 21:21 லூக் 21:24 வெளிப் 11:1 வெளிப் 11:2 |
| 11 | எங்கள் பிதாக்கள் உம்மைத் துதித்த பரிசுத்தமும் மகிமையுமான எங்களுடைய ஆலயம் அக்கினிக்கு இரையாகி, இன்பமான எங்களுடைய ஸ்தானங்களெல்லாம் பாழாயின. | 2இரா 25:9 2நாளா 36:19 சங் 74:5-7 எரே 52:13 புலம் 2:7 எசே 7:20 எசே 7:21 எசே 24:21 எசே 24:25 மத் 24:2 |
| 12 | கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ? | ஏசா 42:14 சங் 10:1 சங் 74:10 சங் 74:11 சங் 74:18 சங் 74:19 சங் 79:5 சங் 80:3 சங் 80:4 சங் 83:1 சங் 89:46-51 சகரி 1:12 வெளிப் 6:10 |