1 | மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய். | யாத் 25:8 யாத் 36:8-19 யாத் 40:2 யாத் 40:17-19 1நாளா 17:1 1நாளா 21:29 யோவா 1:14 யோவா 2:21 எபிரெ 8:2 எபிரெ 9:9 எபிரெ 9:23 எபிரெ 9:24 வெளிப் 21:3 |
2 | ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும், நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும். | யாத் 26:7 யாத் 26:8 எண் 4:25 2சாமு 7:2 1நாளா 17:1 |
3 | ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும். | யாத் 26:9 யாத் 36:10 யோவா 17:21 1கொரி 12:4 1கொரி 12:12-27 எபே 2:21 எபே 2:22 எபே 4:3-6 எபே 4:16-6 கொலோ 2:2 கொலோ 2:19 |
4 | இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடைஓரத்திலும் அப்படியே செய்வாயாக. | யாத் 26:5 யாத் 26:10 யாத் 26:11 யாத் 36:11 யாத் 36:12 யாத் 36:17 |
5 | காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக. |
6 | ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக. அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும். | யாத் 26:11 யாத் 26:33 யாத் 35:11 யாத் 36:13 யாத் 36:18 யாத் 39:33 |
7 | வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக. | யாத் 35:26 யாத் 36:14-18 எண் 4:25 சங் 45:13 1பேது 3:4 1பேது 5:5 |
8 | ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும், நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும். | யாத் 26:2 யாத் 26:13 |
9 | ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடுவாயாக. |
10 | இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி, |
11 | ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடுவாயாக. | யாத் 26:3 யாத் 26:6 |
12 | கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதிமூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும். |
13 | கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தில் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும். | யாத் 26:2 யாத் 26:8 |
14 | சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக. | யாத் 36:19 எண் 4:5 சங் 27:5 சங் 121:4 சங் 121:5 ஏசா 4:6 ஏசா 25:4 |
15 | வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக. | யாத் 26:18 யாத் 26:22-29 யாத் 36:20-33 யாத் 40:17 யாத் 40:18 எண் 4:31 எண் 4:32 எபே 2:20 எபே 2:21 |
16 | ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும். |
17 | ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக. | யாத் 26:19 யாத் 36:22 யாத் 36:24 |
18 | வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது. |
19 | அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும். | யாத் 26:25 யாத் 26:37 யாத் 27:10 யாத் 27:12-18 யாத் 36:24-26 யாத் 38:27 யாத் 38:30 யாத் 38:31 யாத் 40:18 எண் 3:36 எண் 4:31 எண் 4:32 உன்ன 5:15 |
20 | வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும், |
21 | அவைகளின் கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும். |
22 | வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும், |
23 | வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக. |
24 | அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்காகும். | யாத் 36:29 யாத் 36:30 சங் 133:1-3 1கொரி 1:10 1கொரி 3:16 1பேது 2:5 |
25 | அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும். |
26 | சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், | யாத் 36:31-38 எண் 3:36 எண் 4:31 ரோம 15:1 1கொரி 9:19 1கொரி 9:20 கலா 6:1 கலா 6:2 எபே 4:16 கொலோ 2:19 |
27 | வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக. |
28 | நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும். |
29 | பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடக்கடவாய். | யாத் 25:11 யாத் 25:12 |
30 | இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக. | யாத் 40:2 யாத் 40:17 யாத் 40:18 எண் 10:21 யோசு 18:1 எபிரெ 8:2 |
31 | இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும். | யாத் 36:35 யாத் 40:3 யாத் 40:21 லேவி 16:2 லேவி 16:15 2நாளா 3:14 மத் 27:51 மாற் 15:38 லூக் 23:45 எபே 2:14 எபிரெ 9:3-8 எபிரெ 10:20 எபிரெ 10:21 |
32 | சீத்திம் மரத்தினால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும். | யாத் 26:37 யாத் 36:38 எஸ்தர் 1:6 |
33 | கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும். | யாத் 27:10 யாத் 36:36 |
34 | மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப்பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக; | யாத் 25:21 யாத் 40:20 எபிரெ 9:5 |
35 | திரைக்குப் புறம்பாக மேஜையையும், மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக. | யாத் 40:22 எபிரெ 9:2 எபிரெ 9:8 எபிரெ 9:9 |
36 | இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி, | யாத் 36:37 யாத் 40:28 யோவா 10:9 யோவா 14:6 |
37 | அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப்பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய். | யாத் 36:38 |