1 | கர்த்தர் மோசேயை நோக்கி: |
2 | இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக. | யாத் 35:5-29 எண் 7:3-88 உபா 16:16 உபா 16:17 1நாளா 29:1-30 |
3 | நீங்கள் அவர்களிடத்தில் வாங்க வேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், | உபா 8:9 யோபு 28:2 |
4 | இளநீலநூலும், இரத்தாம்பர நூலும், சிவப்பு நூலும், மெல்லிய பஞ்சு நூலும், வெள்ளாட்டு மயிரும், | ஆதி 41:42 எசே 16:10 வெளிப் 19:8 |
5 | சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும், | யாத் 26:14 |
6 | விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும், | யாத் 25:37 யாத் 27:20 யாத் 40:24 யாத் 40:25 |
7 | ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே. | யாத் 28:9-21 |
8 | அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக. | யாத் 15:2 யாத் 36:1-4 லேவி 4:6 லேவி 10:4 லேவி 21:12 எபிரெ 9:1 எபிரெ 9:2 |
9 | நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக. | யாத் 25:40 1நாளா 28:11-19 எபிரெ 8:5 எபிரெ 9:9 |
10 | சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக. | யாத் 37:1-3 உபா 10:1-3 2நாளா 8:11 எபிரெ 9:4 வெளிப் 11:19 |
11 | அதை எங்கும் பசும்பொன் தகட்டால் மூடுவாயாக; நீ அதின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதினால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் திரணையை உண்டாக்கி, | யாத் 25:24 யாத் 30:3 1இரா 6:20 2நாளா 3:4 |
12 | அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து, | யாத் 25:15 யாத் 25:26 யாத் 26:29 யாத் 27:7 யாத் 37:5 யாத் 38:7 |
13 | சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, | யாத் 25:28 யாத் 27:6 யாத் 30:5 யாத் 37:4 யாத் 40:20 எண் 4:6 எண் 4:8 எண் 4:11 எண் 4:14 1நாளா 15:15 |
14 | அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய். |
15 | அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும். | 1இரா 8:8 2நாளா 5:9 |
16 | நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை அந்தப்பெட்டியிலே வைப்பாயாக. | யாத் 16:34 யாத் 27:21 யாத் 30:6 யாத் 30:36 யாத் 31:18 யாத் 32:15 யாத் 34:29 யாத் 38:21 எண் 17:4 உபா 10:2-5 உபா 31:26 1இரா 8:9 2இரா 11:12 2நாளா 34:14 2நாளா 34:15 அப் 7:44 ரோம 3:2 எபிரெ 9:4 |
17 | பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப்பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது. | யாத் 26:34 யாத் 37:6 யாத் 40:20 லேவி 16:12-15 1நாளா 28:11 ரோம 3:25 எபிரெ 4:16 எபிரெ 9:5 1யோவா 2:2 |
18 | பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக. | யாத் 37:7-9 ஆதி 3:24 1சாமு 4:4 1இரா 6:23-28 1இரா 8:6 1இரா 8:7 1நாளா 28:18 எசே 10:2 எசே 10:20 எசே 41:18 எசே 41:19 எபிரெ 9:5 |
19 | ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய். |
20 | அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக. | யாத் 25:18 1இரா 8:7 1நாளா 28:18 2நாளா 3:10 |
21 | கிருபாசனத்தை பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக. | யாத் 25:17 யாத் 26:34 ரோம 10:4 |
22 | அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன். | யாத் 20:24 யாத் 30:6 யாத் 30:36 யாத் 31:18 ஆதி 18:33 லேவி 1:1 லேவி 16:2 எண் 7:89 எண் 17:4 உபா 5:26-31 நியா 20:27 |
23 | சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் பண்ணுவாயாக; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்கக்கடவது. | யாத் 37:10-16 யாத் 40:22 யாத் 40:23 லேவி 24:6 எண் 3:31 1இரா 7:48 1நாளா 28:16 2நாளா 4:8 2நாளா 4:19 எசே 40:41 எசே 40:42 எபிரெ 9:2 |
24 | அதைப் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் திரணையை உண்டாக்கி, | யாத் 25:11 1இரா 6:20-22 |
25 | சுற்றிலும் அதற்கு நாலு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் திரணையையும் உண்டாக்கி, | யாத் 30:3 யாத் 37:2 |
26 | அதற்கு நாலு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைக்கக்கடவாய். |
27 | அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்களாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும். | யாத் 25:14 யாத் 25:28 |
28 | அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும். | யாத் 25:14 யாத் 25:27 எண் 10:17 அப் 9:15 |
29 | அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலி கரகங்களையும் பண்ணக்கடவாய்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய். | யாத் 37:16 எண் 4:7 எண் 7:13 எண் 7:19 எண் 7:31-33 1இரா 7:50 2நாளா 4:22 எஸ்றா 1:9-11 எரே 52:18 எரே 52:19 |
30 | மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய். | யாத் 35:13 யாத் 39:36 லேவி 24:5 லேவி 24:6 எண் 4:7 1சாமு 21:6 1நாளா 9:32 1நாளா 23:29 2நாளா 13:11 மல்கி 1:7 மல்கி 1:12 மத் 12:4 |
31 | பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும். | யாத் 35:14 யாத் 37:17-24 யாத் 40:24 யாத் 40:25 1இரா 7:49 2நாளா 13:11 சகரி 4:2 எபிரெ 9:2 வெளிப் 1:12 வெளிப் 1:20 வெளிப் 2:1 வெளிப் 2:5 வெளிப் 4:5 |
32 | ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்றுகிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும். |
33 | ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும். | எண் 17:4-8 எரே 1:11 எரே 1:12 |
34 | விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக. |
35 | அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும். |
36 | அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும். | யாத் 25:18 எண் 8:4 1இரா 10:16 1இரா 10:17 2நாளா 9:15 |
37 | அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது. | யாத் 37:23 சகரி 4:2 வெளிப் 1:4 வெளிப் 1:12 வெளிப் 1:20 வெளிப் 2:1 வெளிப் 4:5 |
38 | அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக. | 2நாளா 4:21 ஏசா 6:6 |
39 | அதையும், அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும். |
40 | மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு. | யாத் 26:30 யாத் 39:42 யாத் 39:43 எண் 8:4 1நாளா 28:11 1நாளா 28:19 எசே 43:11 எசே 43:12 அப் 7:44 எபிரெ 8:5 |