| 1 | தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது. | சங் 45:1 சங் 60:1 சங் 80:1 |
| 2 | ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. | சங் 40:2 எரே 38:6 எரே 38:22 |
| 3 | நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. | சங் 6:6 சங் 13:1-3 சங் 22:2 எபிரெ 5:7 |
| 4 | நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று. | யோவா 15:25 1பேது 2:22 |
| 5 | தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை. | சங் 17:3 சங் 19:12 சங் 44:20 சங் 44:21 |
| 6 | சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப் போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக. | சங் 7:7 சங் 25:3 சங் 35:26 ஏசா 49:23 லூக் 24:19-21 அப் 4:7 |
| 7 | உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று. | சங் 22:6-8 சங் 44:22 எரே 15:15 யோவா 15:21-24 |
| 8 | என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன். | சங் 31:11 யோபு 19:13-19 மத் 26:48-50 மத் 26:56-50 மத் 26:70-74 யோவா 1:11 யோவா 7:5 |
| 9 | உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது. | சங் 119:139 1இரா 19:10 1நாளா 15:27-29 1நாளா 29:3 மாற் 11:15-17 யோவா 2:14-17 |
| 10 | என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது. | சங் 102:8 சங் 102:9 சங் 109:24 சங் 109:25 லூக் 7:33 லூக் 7:34 |
| 11 | இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன். | சங் 35:13 சங் 35:14 ஏசா 20:2 ஏசா 22:12 யோவே 1:8 யோவே 1:13 |
| 12 | வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம் பண்ணுகிறவர்களின் பாடலானேன். | உபா 16:18 மத் 27:12 மத் 27:13 மத் 27:20 மத் 27:41 மத் 27:42 மத் 27:62 மத் 27:63 லூக் 23:2 அப் 4:26 அப் 4:27 |
| 13 | ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும். | சங் 55:16 சங் 55:17 சங் 91:15 மத் 26:36-46 லூக் 22:44 யோவா 17:1-26 எபிரெ 5:7 1பேது 2:23 |
| 14 | நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும். | சங் 40:1-3 எரே 38:6-13 புலம் 3:55 |
| 15 | ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக. | ஏசா 43:1 ஏசா 43:2 யோனா 2:2-7 மத் 12:40 வெளிப் 12:15 வெளிப் 12:16 |
| 16 | கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும். | சங் 36:7 சங் 63:3 சங் 109:21 |
| 17 | உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும். | சங் 13:1 சங் 22:24 சங் 27:9 சங் 44:24 சங் 102:2 சங் 143:9 மத் 27:46 |
| 18 | நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும். | சங் 10:1 சங் 22:1 சங் 22:19 எரே 14:8 |
| 19 | தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள். | சங் 69:7-9 சங் 22:6 சங் 22:7 ஏசா 53:3 எபிரெ 12:2 1பேது 2:23 |
| 20 | நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன். | சங் 42:10 சங் 123:4 எபிரெ 11:36 |
| 21 | என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள். | எரே 8:14 எரே 9:15 எரே 23:15 மத் 27:34 மத் 27:48 |
| 22 | அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது. | நீதி 1:32 மல்கி 2:2 ரோம 11:8-10 |
| 23 | அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும். | ஏசா 6:9 ஏசா 6:10 ஏசா 29:9 ஏசா 29:10 மத் 13:14 மத் 13:15 யோவா 12:39 யோவா 12:40 அப் 28:26 அப் 28:27 ரோம 11:25 2கொரி 3:14 |
| 24 | உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக. | சங் 79:6 லேவி 26:14-46 உபா 28:15-68 உபா 29:18-28 உபா 31:17 உபா 32:20-26 ஓசி 5:10 மத் 23:35-37 லூக் 21:22 1தெச 2:15 1தெச 2:16 வெளிப் 16:1 |
| 25 | அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக. | 1இரா 9:8 எரே 7:12-14 மத் 23:38 மத் 24:1 மத் 24:2 அப் 1:20 |
| 26 | தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே. | சங் 109:16 2நாளா 28:9 யோபு 19:21 யோபு 19:22 சகரி 1:15 1தெச 2:15 |
| 27 | அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக. | சங் 81:12 யாத் 8:15 யாத் 8:32 யாத் 9:12 லேவி 26:39 ஏசா 5:6 மத் 21:19 மத் 23:31 மத் 23:32 மத் 27:4 மத் 27:5 ரோம 1:28 ரோம 9:18 2தெச 2:11 2தெச 2:12 வெளிப் 22:10 வெளிப் 22:11 |
| 28 | ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக. | யாத் 32:32 யாத் 32:33 ஏசா 65:16 ஓசி 1:9 வெளிப் 3:5 வெளிப் 22:19 |
| 29 | நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. | சங் 40:17 சங் 109:22 சங் 109:31 ஏசா 53:2 ஏசா 53:3 மத் 8:20 2கொரி 8:9 |
| 30 | தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். | சங் 28:7 சங் 40:1-3 சங் 118:21 சங் 118:28 சங் 118:29 |
| 31 | கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். | சங் 50:13 சங் 50:14 சங் 50:23 ஓசி 14:2 எபே 5:19 எபே 5:20 எபிரெ 13:15 1பேது 2:5 |
| 32 | சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும். | சங் 25:9 சங் 34:2 ஏசா 61:1-3 யோவா 16:22 யோவா 20:20 |
| 33 | கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார். | சங் 10:17 சங் 34:6 சங் 72:12-14 சங் 102:17 சங் 102:20 ஏசா 66:2 லூக் 4:18 |
| 34 | வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிறயாவும் அவரைத் துதிக்கக்கடவது. | சங் 96:11 சங் 98:7 சங் 98:8 சங் 148:1-14 சங் 150:6 ஏசா 44:22 ஏசா 44:23 ஏசா 49:13 ஏசா 55:12 வெளிப் 7:11-13 |
| 35 | தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். | சங் 51:18 சங் 102:13 சங் 102:16 சங் 147:12 சங் 147:13 ஏசா 14:32 ஏசா 44:26 ஏசா 46:13 வெளிப் 14:1 |
| 36 | அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள். | சங் 90:16 சங் 90:17 சங் 102:28 ஏசா 44:3 ஏசா 44:4 ஏசா 61:9 அப் 2:39 |