இணை வசன வேதாகமம்

2சாமுவேல் 23

                   
புத்தகங்களைக் காட்டு
1தாவீதுடைய கடைசி வார்த்தைகள்: மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்;ஆதி 49:1 உபா 33:1 யோசு 23:1-24 சங் 72:20 2பேது 1:13-15
2கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.மத் 22:43 மாற் 12:36 அப் 2:25-31 எபிரெ 3:7 எபிரெ 3:8 2பேது 1:21
3இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.ஆதி 33:20 யாத் 3:15 யாத் 19:5 யாத் 19:6 யாத் 20:2
4அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.நியா 5:31 சங் 89:36 சங் 110:3 நீதி 4:18 ஏசா 60:1 ஏசா 60:3 ஏசா 60:18-20 ஓசி 6:5 மல்கி 4:2 லூக் 1:78 லூக் 1:79 யோவா 1:7
5என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ?2சாமு 7:18 2சாமு 12:10 2சாமு 13:14 2சாமு 13:28 2சாமு 18:14 1இரா 1:5 1இரா 2:24 1இரா 2:25 1இரா 11:6-8 1இரா 12:14
6பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக்கூடாததாய் எறிந்து போடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள்.2சாமு 20:1 உபா 13:13 1சாமு 2:12
7அவைகளை ஒருவன் தொடப்போனால், இருப்பாயுதத்தையும் ஈட்டித்தாங்கையும் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்தில்தானே அக்கினியினால் முற்றும் சுட்டெரிக்கப்படும் என்றான்.2சாமு 22:8-10 ஏசா 27:4 மத் 3:10-12 மத் 13:42 லூக் 19:14 லூக் 19:27 யோவா 15:6 2தெச 1:8 2தெச 2:8 எபிரெ 6:8
8தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.1நாளா 11:11 1நாளா 11:12 1நாளா 27:2 1நாளா 27:32
9இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.1நாளா 11:12-14 1நாளா 27:4
10இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிட மாத்திரம் அவனைப் பின்சென்றார்கள்.யோசு 10:10 யோசு 10:42 யோசு 11:8 நியா 15:14 நியா 15:18 1சாமு 11:13 1சாமு 14:6 1சாமு 14:23 1சாமு 19:5 2இரா 5:1 சங் 108:13 சங் 144:10 ரோம 15:18 2கொரி 4:5 எபே 6:10-18
11இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபோது,1நாளா 11:27
12இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்.2சாமு 23:10 சங் 3:8 சங் 44:2 நீதி 21:31
13முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேரும் அறுப்பு நாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது,1நாளா 11:15-19
14தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது.1சாமு 22:1 1சாமு 22:4 1சாமு 22:5 1சாமு 24:22 1நாளா 12:16
15தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின் மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.எண் 11:4 எண் 11:5 சங் 42:1 சங் 42:2 சங் 63:1 சங் 119:81 ஏசா 41:17 ஏசா 44:3 யோவா 4:10 யோவா 4:14 யோவா 7:37
16அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:2சாமு 23:9 1சாமு 19:5 அப் 20:24 ரோம 5:7 2கொரி 5:14
17கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.2சாமு 20:20 ஆதி 44:17 1சாமு 2:30 1சாமு 26:11 1இரா 21:3 1நாளா 11:19
18யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்ததினால், இந்த மூன்று பேர்களில் பேர்பெற்றவனானான்.2சாமு 2:18 2சாமு 3:30 2சாமு 10:10 2சாமு 10:14 2சாமு 18:2 2சாமு 20:10 1சாமு 26:6-8 1நாளா 2:16 1நாளா 11:20 1நாளா 11:21
19இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல.2சாமு 23:9 2சாமு 23:13 2சாமு 23:16 1நாளா 11:25 மத் 13:8 மத் 13:23 1கொரி 15:41
20பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழை காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.2சாமு 8:18 2சாமு 20:23 1இரா 1:8 1இரா 1:26 1இரா 1:38 1இரா 2:29-35 1இரா 2:46-35 1நாளா 18:17 1நாளா 27:5 1நாளா 27:6
21அவன் பயங்கர ரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில், போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.1நாளா 11:23
22இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்.
23முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.1நாளா 27:6
24யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,2சாமு 2:18 1நாளா 11:26 1நாளா 27:7
25ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,1நாளா 11:27 1நாளா 11:28
26பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.1நாளா 11:27 1நாளா 27:10
27ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,1நாளா 11:28
28அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,1நாளா 11:30 1நாளா 27:13
29பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,1நாளா 11:30
30பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி,1நாளா 11:31 1நாளா 27:14
31அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனாகிய அஸ்மாவேத்,1நாளா 11:32
32சால்போனியனாகிய எலியூபா, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன்.1நாளா 11:34
33ஆராரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன்,1நாளா 11:27
34மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்.2சாமு 11:3 2சாமு 15:31 2சாமு 17:23 1நாளா 27:33 1நாளா 27:34
35கர்மேலியனாகிய எஸ்ராயி, அர்பியனாகிய பாராயி,1நாளா 11:37
36சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி,1நாளா 11:38
37அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்,1நாளா 11:39
38இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,2சாமு 20:26 1நாளா 2:53 1நாளா 11:40
39ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.2சாமு 11:3 2சாமு 11:6-27 2சாமு 12:9 1இரா 15:5 1நாளா 11:41 மத் 1:6

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.