1 | கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, அவன் கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு: | சங் 50:14 சங் 103:1-6 சங் 116:1-19 |
2 | கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமானவர். | உபா 32:4 1சாமு 2:2 சங் 18:2-50 சங் 31:3 சங் 42:9 சங் 71:3 சங் 91:2 சங் 144:2 மத் 16:18 |
3 | தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் இரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் இரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் அவரே. | எபிரெ 2:13 |
4 | ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன். | சங் 116:2 சங் 116:4 சங் 116:13 சங் 116:17 |
5 | மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. | 1தெச 5:3 |
6 | பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. | யோபு 36:8 சங் 18:5 சங் 116:3 சங் 140:5 நீதி 5:22 யோனா 2:2 அப் 2:24 |
7 | எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று. | சங் 116:4 சங் 120:1 மத் 26:38 மத் 26:39 லூக் 22:44 எபிரெ 5:7 |
8 | அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. | நியா 5:4 சங் 18:7 சங் 77:18 சங் 97:4 ஆபகூ 3:6-11 மத் 27:51 மத் 28:2 அப் 4:31 |
9 | அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல் மூண்டது. | 2சாமு 22:16 யாத் 15:7 யாத் 15:8 யாத் 19:18 யாத் 24:17 உபா 32:22 யோபு 4:9 யோபு 41:20 யோபு 41:21 சங் 18:8 சங் 18:15 சங் 97:3-5 ஏசா 30:27 ஏசா 30:33 எரே 5:14 எரே 15:14 எபிரெ 12:29 |
10 | வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. | சங் 144:5 ஏசா 64:1-3 |
11 | கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின் மீதில் தரிசனமானார். | ஆதி 3:24 யாத் 25:19 1சாமு 4:4 சங் 18:10 சங் 68:17 சங் 80:1 சங் 99:1 எசே 9:3 எசே 10:2-14 எபிரெ 1:14 |
12 | ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார். | 2சாமு 22:10 சங் 18:11 சங் 18:12 சங் 27:5 சங் 97:2 |
13 | அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது. |
14 | கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார். | யாத் 19:6 நியா 5:20 1சாமு 2:10 1சாமு 7:10 1சாமு 12:17 1சாமு 12:18 யோபு 37:2-5 யோபு 40:9 சங் 29:3-9 சங் 77:16-19 ஏசா 30:30 எசே 10:5 வெளிப் 11:19 |
15 | அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார். | உபா 32:23 யோசு 10:10 சங் 7:12 சங் 7:13 சங் 18:14 சங் 45:5 சங் 144:6 சங் 144:7 ஆபகூ 3:11 |
16 | கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. | யாத் 14:21-27 யாத் 15:8-10 சங் 18:15-17 சங் 114:3-7 |
17 | உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். | சங் 18:16 சங் 144:7 |
18 | என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார். | 2சாமு 22:1 சங் 3:7 சங் 56:9 2கொரி 1:10 2தீமோ 4:17 |
19 | என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். | 2சாமு 15:10-13 1சாமு 19:11-17 1சாமு 23:26 1சாமு 23:27 சங் 18:18 சங் 18:19 சங் 118:10-13 மத் 27:39-44 |
20 | என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். | ஆதி 26:22 1நாளா 4:10 சங் 31:8 சங் 118:5 ஓசி 4:16 |
21 | கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார். | 2சாமு 22:25 1சாமு 26:23 1இரா 8:32 சங் 7:3 சங் 7:4 சங் 7:8 சங் 18:20-25 சங் 19:11 1கொரி 15:58 |
22 | கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை. | எண் 16:15 1சாமு 12:3 யோபு 23:10-12 2கொரி 1:12 |
23 | அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல், | சங் 119:6 சங் 119:86 சங் 119:128 லூக் 1:6 யோவா 15:14 |
24 | அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். | ஆதி 6:9 ஆதி 17:1 யோபு 1:1 சங் 51:6 சங் 84:11 யோவா 1:47 2கொரி 5:11 |
25 | ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத் தக்கதாகவும், தம்முடைய கண்களுக்கு முன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார். | 2சாமு 22:21 ஏசா 3:10 ரோம 2:7 ரோம 2:8 2கொரி 5:10 |
26 | தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும், | மத் 5:7 யாக் 2:13 |
27 | புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். | மத் 5:8 |
28 | சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது. | யாத் 3:7 யாத் 3:8 சங் 12:5 சங் 72:12 சங் 72:13 சங் 140:12 ஏசா 61:1-3 ஏசா 63:9 மத் 5:3 |
29 | கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர். | யோபு 29:3 சங் 27:1 சங் 84:11 யோவா 8:12 வெளிப் 21:23 |
30 | உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். | சங் 18:29 சங் 118:10-12 ரோம 8:37 பிலிப் 4:13 |
31 | தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். | உபா 32:4 தானி 4:37 மத் 5:48 வெளிப் 15:3 |
32 | கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்? | உபா 32:31 உபா 32:39 1சாமு 2:2 ஏசா 44:6 ஏசா 44:8 ஏசா 45:5 ஏசா 45:6 ஏசா 45:21 எரே 10:6 எரே 10:7 எரே 10:16 |
33 | தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர். | யாத் 15:2 சங் 18:32 சங் 27:1 சங் 28:7 சங் 28:8 சங் 31:4 சங் 46:1 ஏசா 41:10 சகரி 10:12 2கொரி 12:9 எபே 6:10 பிலிப் 4:13 |
34 | அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார். | 2சாமு 2:18 உபா 33:25 ஆபகூ 3:19 |
35 | வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். | சங் 18:33 சங் 18:34 சங் 144:1 |
36 | உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும். | ஆதி 15:1 சங் 84:11 எபே 6:16 |
37 | என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். | சங் 4:1 சங் 18:36 நீதி 4:12 |
38 | என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன். | 2சாமு 5:18-25 2சாமு 8:1 2சாமு 8:2 2சாமு 8:13 2சாமு 8:14 2சாமு 10:14 சங் 21:8 சங் 21:9 ரோம 8:37 |
39 | அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு என் பாதங்களின் கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறிய அடித்து வெட்டினேன். | சங் 18:37 சங் 110:1 சங் 110:5 சங் 110:6 சங் 118:10-12 மல்கி 4:1 மல்கி 4:3 |
40 | யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர். | 1சாமு 17:49-51 1சாமு 23:5 சங் 18:32 சங் 18:39 ஏசா 45:5 கொலோ 1:11 |
41 | நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். | ஆதி 49:8 யாத் 23:27 யோசு 10:24 சங் 18:40 சங் 18:41 |
42 | அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை. | 1சாமு 28:6 யோபு 27:9 நீதி 1:28 ஏசா 1:15 எசே 20:3 மீகா 3:4 மத் 7:22 மத் 7:23 லூக் 13:25 லூக் 13:26 |
43 | அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறப்பண்ணுகிறேன். | 2இரா 13:7 சங் 35:5 தானி 2:35 மல்கி 4:1 |
44 | என் ஜனத்தின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள். | 2சாமு 3:1 2சாமு 5:1 2சாமு 18:6-8 2சாமு 19:9 2சாமு 19:14 2சாமு 20:1 2சாமு 20:2 2சாமு 20:22 சங் 2:1-6 சங் 18:43 அப் 4:25-28 அப் 5:30 அப் 5:31 |
45 | அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள். | ஏசா 56:3 ஏசா 56:6 |
46 | அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள். | ஏசா 64:6 யாக் 1:11 |
47 | கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக. | உபா 32:39 உபா 32:40 யோபு 19:25 |
48 | அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர். | 2சாமு 18:19 2சாமு 18:31 1சாமு 25:30 சங் 94:1 |
49 | அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். | 2சாமு 5:12 2சாமு 7:8 2சாமு 7:9 எண் 24:7 எண் 24:17-19 1சாமு 2:8 சங் 18:48 |
50 | இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன். | ரோம 15:9 |
51 | தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார். | 2சாமு 22:2 சங் 3:3 சங் 21:1 சங் 48:3 சங் 89:26 சங் 91:2 சங் 144:10 |