இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.ஆதி 2:4 ஆதி 6:9 ஆதி 10:1 1நாளா 1:1 மத் 1:1 லூக் 3:36-38
2அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.ஆதி 1:27 மல்கி 2:15
3ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.யோபு 14:4 யோபு 15:14-16 யோபு 25:4 சங் 14:2 சங் 14:3 சங் 51:5 லூக் 1:35 யோவா 3:6 ரோம 5:12 1கொரி 15:39 எபே 2:3
4ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.1நாளா 1:1-3 லூக் 3:36-38
5ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.ஆதி 5:8 ஆதி 5:11 ஆதி 5:14 ஆதி 5:17-32 உபா 30:20 சங் 90:10
6சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.ஆதி 4:26
7சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
8சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
9ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.1நாளா 1:2 லூக் 3:37
10ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
11ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம், அவன் மரித்தான்.
12கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.லூக் 3:37
13கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
14கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான்.
15மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.1நாளா 1:2
16மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்.
17மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.
18யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.ஆதி 4:17 1நாளா 1:3
19யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
20யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
21ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.லூக் 3:37
22ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்.ஆதி 6:9 ஆதி 17:1 ஆதி 24:40 ஆதி 48:15 யாத் 16:4 லேவி 26:12 உபா 5:33 உபா 13:4 உபா 28:9 1இரா 2:4 2இரா 20:3 சங் 16:8 சங் 26:11 சங் 56:13 சங் 86:11 சங் 116:9 சங் 128:1 உன்ன 1:4 ஓசி 14:9 ஆமோ 3:3 மீகா 4:5 மீகா 6:8 மல்கி 2:6 லூக் 1:6 அப் 9:31 ரோம 8:1 1கொரி 7:17 2கொரி 6:16 எபே 5:15 கொலோ 1:10 கொலோ 4:5 1தெச 2:12 1தெச 4:1 எபிரெ 11:5 எபிரெ 11:6 1யோவா 1:7
23ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
24ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.ஆதி 37:30 ஆதி 42:36 எரே 31:15 மத் 2:18
25மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.ஆதி 4:18
26மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
27மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.
28லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,
29கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.ஆதி 6:8 ஆதி 6:9 ஆதி 7:23 ஆதி 9:24 ஏசா 54:9 எசே 14:14 எசே 14:20 மத் 24:37 லூக் 3:36 லூக் 17:26 லூக் 17:27 எபிரெ 11:7 1பேது 3:20 2பேது 2:5
30லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்.
31லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம்; அவன் மரித்தான்.
32நோவா ஐந்நூறு வயதானபோது, சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.ஆதி 6:10 ஆதி 7:13 ஆதி 9:18 ஆதி 9:19 ஆதி 9:22-27 ஆதி 10:1 ஆதி 10:21 ஆதி 10:32 1நாளா 1:4-28 லூக் 3:36

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.