1 | ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான். | ஆதி 12:10 |
2 | கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. | ஆதி 12:7 ஆதி 17:1 ஆதி 18:1 ஆதி 18:10-20 |
3 | இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். | ஆதி 26:12 ஆதி 26:14 ஆதி 20:1 சங் 32:8 சங் 37:1-6 சங் 39:12 எபிரெ 11:9 எபிரெ 11:13-16 |
4 | ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், | ஆதி 13:16 ஆதி 15:5 ஆதி 15:18 ஆதி 17:4-8 ஆதி 18:18 ஆதி 22:17 எபிரெ 11:2 |
5 | நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். | ஆதி 12:4 ஆதி 17:23 ஆதி 18:19 ஆதி 22:16 ஆதி 22:18 சங் 112:1 சங் 112:2 சங் 128:1-6 மத் 5:19 மத் 7:24 1கொரி 15:58 கலா 5:6 எபிரெ 11:8 யாக் 2:21 |
6 | ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான். | ஆதி 20:1 |
7 | அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான். | ஆதி 12:13 ஆதி 20:2 ஆதி 20:5 ஆதி 20:12 ஆதி 20:13 நீதி 29:25 மத் 10:28 எபே 5:25 கொலோ 3:9 |
8 | அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான். | நியா 5:28 நீதி 7:6 உன்ன 2:9 |
9 | அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான். |
10 | அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழி சுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான். | ஆதி 12:18 ஆதி 12:19 ஆதி 20:9 ஆதி 20:10 |
11 | பின்பு, அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜனங்களும் அறியச் சொன்னான். | ஆதி 20:6 சங் 105:15 நீதி 6:29 சகரி 2:8 |
12 | ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; | சங் 67:6 சங் 72:16 பிரச 11:6 சகரி 8:12 மத் 13:8 மத் 13:23 மாற் 4:8 1கொரி 3:6 2கொரி 9:10 2கொரி 9:11 கலா 6:7 கலா 6:8 |
13 | அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். | ஆதி 24:35 சங் 112:3 |
14 | அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு, | ஆதி 12:16 ஆதி 13:2 யோபு 1:3 யோபு 42:12 சங் 112:3 சங் 144:13 சங் 144:14 நீதி 10:22 |
15 | அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள். | ஆதி 21:30 |
16 | அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான். | யாத் 1:9 |
17 | அப்பொழுது ஈசாக்கு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து, |
18 | தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான். | ஆதி 21:31 எண் 32:38 சங் 16:4 ஓசி 2:17 சகரி 13:2 |
19 | ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள். | உன்ன 4:15 யோவா 4:10 யோவா 4:11 யோவா 7:38 |
20 | கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம் பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான். | ஆதி 21:25 |
21 | வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான். | எஸ்றா 4:6 |
22 | பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான். | சங் 4:1 சங் 18:19 சங் 118:5 |
23 | அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான். | ஆதி 21:31 ஆதி 46:1 நியா 20:1 |
24 | அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார். | ஆதி 15:1 ஆதி 17:7 ஆதி 24:12 ஆதி 28:13 ஆதி 31:5 யாத் 3:6 மத் 22:32 அப் 7:32 |
25 | அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள். | ஆதி 8:20 ஆதி 12:7 ஆதி 13:18 ஆதி 22:9 ஆதி 33:20 ஆதி 35:1 யாத் 17:15 |
26 | அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள். | ஆதி 20:3 ஆதி 21:22-32 |
27 | அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான். | ஆதி 26:14 ஆதி 26:16 நியா 11:7 அப் 7:9 அப் 7:14 அப் 7:27 அப் 7:35 வெளிப் 3:9 |
28 | அதற்கு அவர்கள்: நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம். | ஆதி 21:22 ஆதி 21:23 ஆதி 39:5 யோசு 3:7 2நாளா 1:1 ஏசா 45:14 ஏசா 60:14 ஏசா 61:6 ஏசா 61:9 ரோம 8:31 1கொரி 14:25 எபிரெ 13:5 |
29 | நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள். | ஆதி 26:11 ஆதி 26:14 ஆதி 26:15 |
30 | அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள். | ஆதி 19:3 ஆதி 21:8 ஆதி 31:54 ரோம 12:18 எபிரெ 12:14 1பேது 4:9 |
31 | அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள். | ஆதி 19:2 ஆதி 21:14 ஆதி 22:3 ஆதி 31:55 |
32 | அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள். | ஆதி 26:25 நீதி 2:4 நீதி 2:5 நீதி 10:4 நீதி 13:4 மத் 7:7 |
33 | அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள் வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது. | ஆதி 21:31 |
34 | ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான். | ஆதி 36:2 ஆதி 36:5 ஆதி 36:13 |
35 | அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள். | ஆதி 6:2 ஆதி 27:46 ஆதி 28:1 ஆதி 28:2 ஆதி 28:8 |