இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 12

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.ஆதி 11:31 ஆதி 11:32 ஆதி 15:7 நெகே 9:7 ஏசா 41:9 ஏசா 51:2 எசே 33:24
2நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.ஆதி 13:16 ஆதி 15:5 ஆதி 17:5 ஆதி 17:6 ஆதி 18:18 ஆதி 22:17 ஆதி 22:18 ஆதி 24:35 ஆதி 26:4 ஆதி 27:29 ஆதி 28:3 ஆதி 28:14 ஆதி 35:11 ஆதி 46:3 யாத் 1:7 யாத் 32:10 எண் 14:12 எண் 24:9 எண் 24:10 உபா 26:5 2சாமு 7:9 1இரா 3:8 1இரா 3:9 மீகா 7:20 ரோம 4:11 கலா 3:7
3உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.ஆதி 27:29 யாத் 23:22 எண் 24:9 மத் 25:40 மத் 25:45
4கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.ஆதி 11:27
5ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள்.ஆதி 14:14 ஆதி 14:21 ஆதி 46:5-26
6ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்.எபிரெ 11:9
7கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.ஆதி 17:1 ஆதி 18:1 ஆதி 32:30
8பின்பு அவன் அவ்விடம்விட்டுப்பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.ஆதி 28:19 ஆதி 35:3 ஆதி 35:15 ஆதி 35:16 யோசு 8:17 யோசு 18:22 நெகே 11:31
9அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.ஆதி 13:3 ஆதி 24:62 சங் 105:13 எபிரெ 11:13 எபிரெ 11:14
10அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.ஆதி 26:1 ஆதி 42:5 ஆதி 43:1 ஆதி 47:13 ரூத் 1:1 2சாமு 21:1 1இரா 17:1-18 2இரா 4:38 2இரா 6:25 2இரா 7:1-8 சங் 34:19 சங் 107:34 எரே 14:1 யோவா 16:33 அப் 7:11 அப் 14:22
11அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.ஆதி 12:14 ஆதி 26:7 ஆதி 29:17 ஆதி 39:6 ஆதி 39:7 2சாமு 11:2 நீதி 21:30 உன்ன 1:14
12எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள்.ஆதி 20:11 ஆதி 26:7 1சாமு 27:1 நீதி 29:25 மத் 10:28 1யோவா 1:8-10
13ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.யோவா 8:44 ரோம 3:6-8 ரோம 6:23 கொலோ 3:6
14ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.ஆதி 3:6 ஆதி 6:2 ஆதி 39:7 மத் 5:28
15பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக்கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.எஸ்தர் 2:2-16 நீதி 29:12 ஓசி 7:4 ஓசி 7:5 ஓசி 40:2 ஓசி 41:1 யாத் 2:5 யாத் 2:15 1இரா 3:1 2இரா 18:21 எரே 25:19 எரே 46:17 எசே 32:2
16அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.ஆதி 13:2 ஆதி 20:14
17ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.ஆதி 20:18 1நாளா 16:21 1நாளா 21:22 யோபு 34:19 சங் 105:14 சங் 105:15 எபிரெ 13:4
18அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற்போனதென்ன?ஆதி 3:13 ஆதி 4:10 ஆதி 20:9 ஆதி 20:10 ஆதி 26:9-11 ஆதி 31:26 ஆதி 44:15 யாத் 32:21 யோசு 7:19 1சாமு 14:43 நீதி 21:1
19இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.
20பார்வோன் அவனைக் குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.யாத் 18:27 1சாமு 29:6-11 சங் 105:14 சங் 105:15 நீதி 21:1

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.