1 | நோவாவின் குமாரராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள். | ஆதி 2:4 ஆதி 5:1 ஆதி 6:9 மத் 1:1 |
2 | யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். | ஆதி 10:21 1நாளா 1:5-7 ஏசா 66:19 எசே 27:7 எசே 27:12-14 எசே 27:19-14 எசே 38:2 எசே 38:6 எசே 38:15 எசே 39:1 வெளிப் 20:8 |
3 | கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். |
4 | யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். | எண் 24:24 ஏசா 23:1 ஏசா 23:12 தானி 11:30 |
5 | இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன. | ஆதி 10:25 சங் 72:10 ஏசா 24:15 ஏசா 40:15 ஏசா 41:5 ஏசா 42:4 ஏசா 42:10 ஏசா 49:1 ஏசா 51:5 ஏசா 59:18 ஏசா 60:9 எரே 2:10 எரே 25:22 செப் 2:11 |
6 | காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள். | ஆதி 9:22 1நாளா 1:8-16 1நாளா 4:40 சங் 78:51 சங் 105:23 சங் 105:27 சங் 106:22 |
7 | கூஷூடைய குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள். | சங் 72:10 |
8 | கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். | மீகா 5:6 |
9 | இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று. | ஆதி 6:4 ஆதி 25:27 ஆதி 27:30 ஆதி 27:30 எரே 16:16 எசே 13:18 மீகா 7:2 |
10 | சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள். | எரே 50:21 மீகா 5:6 |
11 | அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும், | மீகா 5:6 |
12 | நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம். |
13 | மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும், | 1நாளா 1:11 1நாளா 1:12 எரே 46:9 எசே 30:5 |
14 | பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப்தொரீமையும் பெற்றான். | ஏசா 11:11 எரே 44:1 |
15 | கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும், | 1நாளா 1:13 |
16 | எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும், | நியா 1:21 2சாமு 24:18 சகரி 9:7 |
17 | ஈவியரையும், அர்கீரியரையும், சீநியரையும், | ஆதி 34:2 |
18 | அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள். | எசே 27:8 |
19 | கானானியரின் எல்லை, சீதோன் முதல் கேரார் வழியாய்க் காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது. | ஆதி 13:12-17 ஆதி 15:18-21 எண் 34:2-15 உபா 32:8 யோசு 12:7 யோசு 12:8 யோசு 14:1-21 |
20 | இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் காமுடைய சந்ததியார். | ஆதி 10:6 ஆதி 11:1-9 |
21 | சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான். | ஆதி 11:10-26 |
22 | சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள். | ஆதி 9:26 1நாளா 1:17-27 |
23 | ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள். | யோபு 1:1 எரே 25:20 |
24 | அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான். | ஆதி 11:12-15 |
25 | ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான். | ஆதி 10:21 1நாளா 1:19 |
26 | யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும், | 1நாளா 1:20-28 |
27 | அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், | 1நாளா 1:20-28 |
28 | ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், | ஆதி 25:3 1இரா 10:1 1நாளா 1:20-28 |
29 | ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர். | 1இரா 9:28 1இரா 22:48 1நாளா 8:18 1நாளா 9:10 1நாளா 9:13 யோபு 22:24 யோபு 28:16 சங் 45:9 ஏசா 13:12 |
30 | இவர்களுடைய குடியிருப்பு மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிமட்டும் இருந்தது. | எண் 23:7 |
31 | இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் சேமுடைய சந்ததியார். | ஆதி 10:5 ஆதி 10:20 அப் 17:26 |
32 | தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப்பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன. | ஆதி 10:1 ஆதி 10:20 ஆதி 10:31 ஆதி 5:29-31 |