| 1 | யூதா கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகே உள்ள சீன்வனாந்திரமே தென்பகுதியின் கடைசி எல்லை. |
| 2 | தென்பகுதியான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு நோக்கி இருக்கிற முனைதுவங்கி |
| 3 | தென்பகுதியில் இருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கே இருக்கிற காதேஸ்பர்னெயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய் |
| 4 | அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல்வரைக்கும் போய் முடியும்; இதுவே உங்களுடைய தென்பகுதிக்கு எல்லையாக இருக்கும் என்றான். |
| 5 | கிழக்கு எல்லையானது, யோர்தான் நதியின் ஆரம்பம்வரை இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் நதியின் ஆரம்பம் இருக்கிற கடலின் முனைதுவங்கி |
| 6 | பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கே இருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் மகனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய் |
| 7 | பிறகு ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் நீரூற்றுவரைக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று |
| 8 | பிறகு எபூசியர்கள் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாக இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கே இருக்கிற இராட்சதர்களுடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் உச்சிவரை ஏறிப்போய் |
| 9 | அந்த மலையின் உச்சியிலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய் |
| 10 | பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய் |
| 11 | பின்பு வடக்கே இருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாகச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும். |
| 12 | மேற்கு எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை. |
| 13 | எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை யூதா கோத்திரத்தின் நடுவே பங்காகக் கொடுத்தான். |
| 14 | அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று மகன்களையும் காலேப் துரத்திவிட்டு |
| 15 | அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பெயர் கீரியாத்செப்பேர். |
| 16 | கீரியாத்செப்பேரை அழித்துக் கைப்பற்றுகிறவனுக்கு, என் மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்று காலேப் சொன்னான். |
| 17 | அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினான்; எனவே, தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். |
| 18 | அவள் புறப்படும்போது, என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான். |
| 19 | அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான். |
| 20 | யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்கு என்னவென்றால்: |
| 21 | தென்புறத்தின் கடைசியான ஏதோமின் எல்லைக்கு நேராக, யூதா கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர் |
| 22 | கீனா. திமோனா, ஆதாதா |
| 23 | கேதேஸ், ஆத்சோர், இத்னான் |
| 24 | சீப், தேலெம், பெயாலோத் |
| 25 | ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர் |
| 26 | ஆமாம், சேமா, மொலாதா |
| 27 | ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத் |
| 28 | ஆத்சார்சுவால், பெயர்செபா, பிஸ்யோத்யா |
| 29 | பாலா, ஈயிம், ஆத்சேம் |
| 30 | எல்தோலாத், கெசீல், ஒர்மா |
| 31 | சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா |
| 32 | லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இருபத்தொன்பது. |
| 33 | பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா |
| 34 | சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம் |
| 35 | யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா |
| 36 | சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினான்கு. |
| 37 | சேனான், அதாஷா, மிக்தால்காத் |
| 38 | திலியான், மிஸ்பே, யோக்தெயேல் |
| 39 | லாகீஸ், போஸ்காத், எக்லோன் |
| 40 | காபோன், லகமாம், கித்லீஷ் |
| 41 | கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினாறு. |
| 42 | லிப்னா, ஏத்தேர், ஆஷான் |
| 43 | இப்தா, அஸ்னா, நெத்சீப் |
| 44 | கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது. |
| 45 | எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும் |
| 46 | எக்ரோன் துவங்கிச் சமுத்திரம்வரை, அஸ்தோத்தின் பகுதியில் இருக்கிற எல்லா ஊர்களும், அவைகளின் கிராமங்களும் |
| 47 | அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிவரையிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை. |
| 48 | மலைகளில் சாமீர், யாத்தீர், சோக்கோ |
| 49 | தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா |
| 50 | ஆனாப், எஸ்தெமொ, ஆனீம் |
| 51 | கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினொன்று. |
| 52 | அராப், தூமா, எஷியான் |
| 53 | யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா |
| 54 | உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது. |
| 55 | மாகோன், கர்மேல், சீப், யுத்தா |
| 56 | யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா |
| 57 | காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்படப் பத்து. |
| 58 | அல்கூல், பெத்சூர், கெதோர் |
| 59 | மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு. |
| 60 | கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இரண்டு. |
| 61 | வனாந்திரத்தில், பெத்அரபா, மித்தீன், செக்காக்கா |
| 62 | நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு. |
| 63 | எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களை யூதா கோத்திரத்தார்கள் துரத்திவிடமுடியாமல்போனது; ஆகவே இந்த நாள்வரை எபூசியர்கள் யூதா கோத்திரத்தார்களோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள். |