| 1 | அல்லேலூயா, கர்த்தருடைய பெயரைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரர்களே, துதியுங்கள். |
| 2 | கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள். |
| 3 | கர்த்தர் நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; அது இன்பமானது. |
| 4 | கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார். |
| 5 | கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன். |
| 6 | வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார். |
| 7 | அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார். |
| 8 | அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார். |
| 9 | எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார். |
| 10 | அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று; |
| 11 | எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து |
| 12 | அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். |
| 13 | கர்த்தாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். |
| 14 | கர்த்தர் தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். |
| 15 | அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. |
| 16 | அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. |
| 17 | அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. |
| 18 | அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள். |
| 19 | இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தருக்கு நன்றிசொல்லுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தருக்கு நன்றிசொல்லுங்கள். |
| 20 | லேவி குடும்பத்தாரே, கர்த்தருக்கு நன்றிசொல்லுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தருக்கு நன்றிசொல்லுங்கள். |
| 21 | எருசலேமில் குடியிருக்கிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். அல்லேலூயா. |