| 1 | வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்! நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம். |
| 2 | கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம். அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம். |
| 3 | ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்! பிற “தெய்வங்களை” எல்லாம் ஆள்கின்ற பேரரசர் ஆவார். |
| 4 | ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை. |
| 5 | சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார். தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார். |
| 6 | வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம். நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம். |
| 7 | அவரே நமது தேவன்! நாம் அவரது ஜனங்கள். அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம். |
| 8 | தேவன்: “பாலைவனத்தில் மேரிபாவில் செய்தது போலவும், மாசாவில் செய்தது போலவும் அடம்பிடிக்காதீர்கள்” என்று கூறினார். |
| 9 | உங்கள் முற்பிதாக்கள் என்னை சோதித்தார்கள். அவர்கள் என்னை சோதித்தபோது நான் செய்யக்கூடியவற்றைக் கண்டார்கள். |
| 10 | நாற்பது ஆண்டுகள் அந்த ஜனங்களிடம் நான் பொறுமையாக இருந்தேன். அவர்கள் உண்மையில்லாதவர்கள் என நான் அறிவேன். அந்த ஜனங்கள் என் போதனைகளைப் பின்பற்ற மறுத்தார்கள். |
| 11 | எனவே நான் கோபமடைந்தேன், எனது இளைப்பாறுதலின் தேசத்தில் அவர்கள் நுழை வதில்லை என ஆணையிட்டேன். |