வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 125

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவர்கள் சீயோன் மலையைப் போன்றிருப்பார்கள். அவர்கள் அசைக்கப்படுவதில்லை. அவர்கள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.
2எருசலேமைச் சுற்றிலும் மலைகள் உள்ளது போல, கர்த்தர் அவரது ஜனங்களைச் சுற்றிலும் இருக்கிறார். என்றென்றைக்கும் எப்போதும் அவர் தமது ஜனங்களைக்காப்பார்.
3நல்ல ஜனங்களின் நாட்டைக் கொடிய ஜனங்கள் நிரந்தரமாக ஆளப்போவதில்லை. அவ்வாறு நிகழ்ந்தால் நல்லோரும் கூட தீய காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.
4கர்த்தாவே, நல்லோருக்கு நல்லவராக இரும். பரிசுத்த இருதயம் உள்ளோரிடம் நல்லவராக இரும்.
5கொடிய ஜனங்கள் தவறான காரியங்களைச் செய்கிறார்கள். அக்கொடியோரைக் கர்த்தர் தண்டிப்பார். இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.