வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 124

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்? இஸ்ரவேலே, எனக்குப் பதில் கூறு.
2ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
3கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
4நம்மை அடித்துச்செல்லும் பெருவெள்ளத்தைப் போன்றும், நம்மை அமிழ்த்துவிடும் நதியைப் போன்றும் நம் பகைவர்களின் சேனைகள் நம்மிடம் நடந்துகொண்டிருக்கும்.
5நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும் தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள்.
6கர்த்தரைத் துதியுங்கள்! நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்குக் கர்த்தர் அனுமதிக்கவில்லை.
7வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம். வலை அறுந்தது, நாம் தப்பினோம்.
8நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது. கர்த்தரே பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.