சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் (லூக்கா 18-1)
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; (1 திமோத்தேயு 2:1)
நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா?
நான் உங்கள் முன்பாக கேட்க வேண்டிய ஒரு கேள்வி இருக்கிறது. அது மூன்று வார்த்தைகளில் மட்டுமே இருக்கிறது. நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? என்பதே. இந்த கேள்விக்கு நீங்கள் மட்டுமே பதிலளிக்க முடியும். நீங்கள் பொது ஆராதனைக்கு அதாவது ஞாயிறு ஆராதனைக்கு செல்கிறீர்களா இல்லையா என்ற கேள்விக்கு உங்களுடைய திருச்சபை போதகர் விடையளிக்க முடியும். அதேபோல் நீங்கள் குடும்ப ஆராதனையில் கலந்துக் கொள்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் குடும்பத்தவர்கள் அறிவார்கள். ஆனால் நீங்கள் தனிஜெபம் செய்கிறீர்களா? என்பதை உங்களுக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரியும்.
நான் உங்கள் முன்பாக சொல்லப்போகிற இந்த காரியத்தை அறிந்து கொள்ளும்படியாக வேண்டி கொள்ளுகிறேன். இந்த கேள்வியை குறித்து, இது எங்களின் தனிப்பட்ட விஷயம் என்று சொல்லிவிடாதீர்கள். உங்களுடைய இருதயம் தேவனுடைய பார்வைக்கு முன் சுத்தமாக இருக்கும்போது நீங்கள் எதைப்பற்றியும் பயப்பட தேவையில்லை.
நாங்கள் ஜெபிக்கிறோம் என்று சொல்லி என்னுடைய கேள்வியை அலட்சியப்படுத்திவிடாதீர்கள். இந்த கேள்வி மிகவும் அவசியம்தானா என்று என்னிடம் கேட்காதீர்கள். ஒரு சில நிமிடம் நான் சொல்லப் போகிற காரியங்களை பொருனையுடன் கேளுங்கள். அப்போது நான் இந்த கேள்வியை கேட்டதற்கான காரணத்தை புரிந்துக்கொள்வீர்கள்.
- நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? என்று நான் உங்களை கேட்டேன். ஏனென்றால் ஜெபமே மனிதனின் இரட்சிப்புக்கு அத்தியாவசிய தேவையாய் இருக்கிறது.
நான் இதை ஆலோசனையாக சொல்லாமல் அத்தியாவசிய தேவை என்கிறேன். நான் குழந்தையிடமோ அல்லது முட்டாளிடமோ பேசவில்லை. அதேபோல நான் புறஜாதி மக்களிடமும் பேசவில்லை எங்கே கொஞ்சம் கொடுக்கப்படுகிறதோ அங்கே கொஞ்சம் கேட்கப்படும். தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்து கொள்ளும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அப்படி தங்களை அழைத்துகொள்ளுகிற மக்களை பார்த்து நான் சொல்வது: ஜெபம் செய்யாமல் எந்த ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இரட்சிப்பை பெற்று கொள்ள முடியும் என எதிர்பார்க்க கூடாது.
இரட்சிப்பு கிருபையினால் மாத்திரமே கிடைக்கிறது என்று ஆணித்தனமாக சொல்லுகிறேன். மிகப்பெரிய பாவிக்கும் அது முழுமையாக இலவசமாக கிடைக்கிறதாய் இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்ளுகிறேன். இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவர்களை பார்த்து "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை இப்போது விசுவாசி நீ இரட்சிப்பை பெற்று கொள்வாய்" என்று சொல்ல நான் தயங்குவதில்லை. ஆனால் எந்த ஒரு மனிதனும் கேட்காமல் இரட்சிப்பை பெற்று கொண்டதாக நான் வேதத்தில் பார்க்கவில்லை. மனிதர்கள் தங்கள் இருதயத்தை நோக்காமல் "கர்த்தராகிய இயேசுவே எங்களுக்கு தாரும்" என்று கேட்காமல் தங்கள் பாவத்திற்கான மன்னிப்பை பெற்று கொண்டதாக நான் பார்க்கவில்லை. தங்களின் ஜெபங்களின் மூலமாக மட்டுமே இரட்சிப்பை யாரும் அடைகிறதில்லை. ஆனால் ஜெபிக்காமல் இரட்சிப்பை பெற்று கொண்டதாக நான் யாரையும் பார்க்கவில்லை.
வேதத்தை வாசிக்க வேண்டியது இரட்சிப்பை பெற்று கொள்வதற்கு அத்தியாவசியமான தேவை இல்லை. ஏனென்றால் மனிதர்கள் படிப்பறிவு அற்றவர்களாகவோ அல்லது குருடராகவோ இருந்தாலும் கூட கிறிஸ்து அவர்கள் இருதயத்தில் இருக்க முடியும். அதேபோல் மனிதர்கள் சுவிசேஷ பிரசங்கத்ததை கேட்பதும் இரட்சிப்பை பெற்று கொள்வதற்கு அத்தியாவசிய தேவை இல்லை ஏனெனில் மக்கள் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களிலே கூட வாழலாம். அல்லது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலே இருக்கும் வியாதியுள்ளவராய் இருக்கலாம் அல்லது செவிடராய் இருக்கலாம். ஆனால் இந்த காரியங்களை போல ஜெபம் இல்லை. ஜெபமானது மனிதன் இரட்சிப்பை பெற்று கொள்வதற்கு அத்தியாவசிய தேவையாய் இருக்கிறது.
மனிதர்கள் கற்று கொள்வதற்கும், சுகாதாரத்தை பெற்று கொள்வதற்கும் வித்தியாசமான பாதையென ஒன்றும் இல்லை. பிரதம மந்திரிகள் மற்றும் அரசர்கள், ஏழை மற்றும் விவசாயிகள் என அனைவரும் ஒரே மாதிரிதான் தங்கள் சரீர தேவைகளையும் இருதயத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளுகிறார்கள். எந்த மனிதனும் மற்றவர்களுக்கு பதிலாக உண்ணவோ, குடிக்கவோ அல்லது தூங்கவோ முடியாது. அதேபோல் எந்த ஒரு மனிதனும் மற்றவர்களுக்காக கல்வி பயில முடியாது. இவை எல்லாவற்றையும் ஒவ்வொரு மனிதனும் தனக்கென தானகத்தான் செய்து கொள்ள வேண்டும்.
எப்படி நமது சரீரத்திற்கும், மூளைக்கும் தேவைகள் இருக்கிறதோ அதேபோல் நமது ஆத்துமாவிற்கும் தேவைகள் இருக்கிறது. நமது ஆத்துமா நன்றாக இருப்பதற்கு ஒரு சில தேவைகள் மிகவும் அத்தியாவசியமாய் இருக்கிறது. அந்த தேவைகளை ஒவ்வொருவரும் தங்களுக்கென செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென மனந்திரும்ப வேண்டும். ஒவ்வொருவரும் கிறிஸ்துவிடம் தங்களுக்கென்று செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென தேவனிடம் ஜெபிக்க வேண்டும். இந்த காரியங்களை உங்களுக்கென்று நீங்கள் மட்டுமே செய்ய முடியும். உங்களுக்கு பதிலாக யாரும் இக்காரியங்களை செய்ய முடியாது. ஜெபிக்காமல் இருப்பது என்பது தேவனுக்குள் இல்லாமல் இருப்பது, கிறிஸ்துவுக்குள் இல்லாமல் இருப்பது, கிருபை இல்லாமல் இருப்பது, நம்பிக்கை இல்லாமல் இருப்பது, பரலோகம் இல்லாமல் இருப்பது. அது நரகத்தின் சாலையில் போய்க் கொண்டிருப்பது போல் இருக்கிறது. இப்போது நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? ஏன்று நான் கேட்ட கேள்வியை பார்த்து நீங்கள் வியக்க முடியும்.