ஆசிரியர் பூன்-சிங் போ மலேசியாவில் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர். இரட்சிக்கப்படாத பின்னணியத்தில் பிறந்த இவர், இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்தபோது தேவகிருபையால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டார். அவருடைய படிப்பை முடித்தபின் ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். 1983-ஆம் ஆண்டு முதலாவது சீர்திருத்த பாப்டிஸ்ட் சபையை நிறுவினார். அவருடைய விசுவாசத்திற்காக 1987 முதல் 1988 வரை சுமார் 325 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். அவர் தமான்சாரா ரிஃபார்ம்டு பேப்டிஸ்ட் (DRBC) திருச்சபையின் தலைமைப் போதகராக இருந்து ஓய்வு பெற்றவர். திருமணமான இவருக்கு நான்கு குமாரர்கள் உள்ளனர். பேரக் குழந்தைகளும் உள்ளனர். தனது டாக்டர் பட்டத்தை எலக்ட்ரானிக்ஸ் இஞ்ஜினியரிங் துறையில், லிவர்பூல் (Liverpool) பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மதங்கள் குறித்த பட்டப்படிப்பையும், நார்த்-வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் இறையியலில் டாக்டர் பட்டமும் பெற்றவர்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.