1 | கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும், | நியா 6:12 நியா 13:3 ஆதி 16:7-10 ஆதி 16:13-10 ஆதி 22:11 ஆதி 22:12 ஆதி 48:16 யாத் 3:2-6 யாத் 14:19 யாத் 23:20 யாத் 33:14 யோசு 5:13 யோசு 5:14 ஏசா 63:9 ஓசி 12:3-5 சகரி 3:1 சகரி 3:2 மல்கி 3:1 அப் 7:30-33 |
2 | நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்? | யாத் 23:32 யாத் 23:33 யாத் 34:12-16 எண் 33:52 எண் 33:53 உபா 7:2-4 உபா 7:16-4 உபா 7:25-4 உபா 7:26-4 உபா 12:2 உபா 12:3 உபா 20:16-18 2கொரி 6:14-17 |
3 | ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார். | நியா 2:21 எண் 33:55 யோசு 23:13 |
4 | கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள். | 1சாமு 7:6 எஸ்றா 10:1 நீதி 17:10 எரே 31:9 சகரி 12:10 லூக் 6:21 லூக் 7:38 2கொரி 7:10 யாக் 4:9 |
5 | அவ்விடத்திற்குப் போகீம் என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள். | ஆதி 35:8 யோசு 7:26 |
6 | யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர் தங்கள்தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள். | யோசு 22:6 யோசு 24:28-31 |
7 | யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள். | யோசு 24:31 2இரா 12:2 2நாளா 24:2 2நாளா 24:14-22 பிலிப் 2:12 |
8 | நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான். | யோசு 24:29 யோசு 24:30 |
9 | அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள். | யோசு 19:50 யோசு 24:30 |
10 | அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று. | ஆதி 15:15 ஆதி 25:8 ஆதி 25:17 ஆதி 49:33 எண் 27:13 உபா 31:16 2சாமு 7:12 அப் 13:36 |
11 | அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து, | நியா 4:1 நியா 6:1 நியா 13:1 ஆதி 13:13 ஆதி 38:7 2நாளா 33:2 2நாளா 33:6 எஸ்றா 8:12 |
12 | தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள். | உபா 13:5 உபா 29:18 உபா 29:25 உபா 31:16 உபா 31:17 உபா 32:15 உபா 33:17 |
13 | அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள். | நியா 2:11 நியா 3:7 நியா 10:6 1சாமு 31:10 1இரா 11:5 1இரா 11:33 2இரா 23:13 சங் 106:36 1கொரி 8:5 1கொரி 10:20-22 |
14 | அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார். | நியா 3:7 நியா 3:8 நியா 10:7 லேவி 26:28 எண் 32:14 உபா 28:20 உபா 28:58 உபா 29:19 உபா 29:20 உபா 31:17 உபா 31:18 2நாளா 36:16 சங் 106:40-42 |
15 | கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள். | எரே 18:8 எரே 21:10 எரே 44:11 எரே 44:27 மீகா 2:3 |
16 | கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள். | நியா 3:9 நியா 3:10 நியா 3:15 நியா 4:5 நியா 6:14 1சாமு 12:11 அப் 13:20 |
17 | அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள். | 1சாமு 8:5-8 1சாமு 12:12 1சாமு 12:17 1சாமு 12:19 2நாளா 36:15 2நாளா 36:16 சங் 106:43 |
18 | கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார். | யாத் 3:12 யோசு 1:5 அப் 18:9 அப் 18:10 |
19 | நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்துகொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள். | நியா 2:7 நியா 3:11 நியா 3:12 நியா 4:1 நியா 8:33 யோசு 24:31 2நாளா 24:17 2நாளா 24:18 |
20 | ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி: இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால், | நியா 2:14 நியா 3:8 நியா 10:7 யாத் 32:10 யாத் 32:11 உபா 32:22 |
21 | யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன். | நியா 2:3 நியா 3:3 யோசு 23:13 எசே 20:24 |
22 | அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார். | நியா 3:1-4 |
23 | அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார். |