1 | யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள். | யோசு 1:15 யோசு 22:4 |
2 | அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும், | எண் 21:23-30 உபா 2:24-37 உபா 3:6-17 நெகே 9:22 சங் 135:11 சங் 136:19 சங் 136:20 |
3 | சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல் மட்டும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான். | யோசு 11:2 உபா 3:17 யோவா 6:1 |
4 | இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி, | எண் 21:33-35 உபா 3:1-7 உபா 3:10-7 |
5 | எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆண்டான். | யோசு 12:1 யோசு 11:3 உபா 3:8 உபா 3:9 உபா 4:47 உபா 4:48 |
6 | அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான். | எண் 21:24-35 |
7 | யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும், | யோசு 12:1 யோசு 3:17 யோசு 9:1 |
8 | யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்: | யோசு 10:40 யோசு 11:16 |
9 | எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று, | யோசு 6:2-21 |
10 | எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று, | யோசு 10:23 |
11 | யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று, | யோசு 10:3-23 |
12 | எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று, | யோசு 10:3 யோசு 10:23 யோசு 15:39 |
13 | தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று, | யோசு 10:3 யோசு 10:38 |
14 | ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று, | எண் 14:45 எண் 21:3 |
15 | லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று, | யோசு 10:29 யோசு 10:30 |
16 | மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று, | யோசு 10:28 |
17 | தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று, | யோசு 15:34 |
18 | ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று, | யோசு 19:30 1சாமு 4:1 |
19 | மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று, | யோசு 11:1 |
20 | சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று, | யோசு 11:1 யோசு 19:15 |
21 | தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று, | யோசு 17:11 நியா 5:19 |
22 | கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று, | யோசு 15:23 யோசு 19:37 யோசு 21:32 |
23 | தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று, | யோசு 11:2 யோசு 17:11 |
24 | திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள். | 1இரா 16:23 2இரா 15:14 |