1 | கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: |
2 | கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள். | எண் 31:21 எபிரெ 9:10 |
3 | அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது. | எண் 5:2 எண் 15:36 லேவி 4:12 லேவி 4:21 லேவி 13:45 லேவி 13:46 லேவி 16:27 லேவி 24:14 எபிரெ 13:11-13 |
4 | அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன் விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன். | லேவி 4:6 லேவி 4:17 லேவி 16:14 லேவி 16:19 எபிரெ 9:13 எபிரெ 9:14 எபிரெ 12:24 1பேது 1:2 |
5 | பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும். | யாத் 29:14 லேவி 4:11 லேவி 4:12 லேவி 4:21 சங் 22:14 ஏசா 53:10 |
6 | அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன். | லேவி 14:4 லேவி 14:6 லேவி 14:49 சங் 51:7 ஏசா 1:18 எபிரெ 9:19-23 |
7 | பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். | எண் 19:8 எண் 19:19 லேவி 11:25 லேவி 11:40 லேவி 14:8 லேவி 14:9 லேவி 15:5 லேவி 16:26-28 |
8 | அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். |
9 | சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக்கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்; அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும். | எண் 19:18 எண் 9:13 2கொரி 5:21 எபிரெ 7:26 எபிரெ 9:13 |
10 | கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக. | எண் 19:7 எண் 19:8 எண் 19:19 |
11 | செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான். | எண் 19:16 எண் 5:2 எண் 9:6 எண் 9:10 எண் 31:19 லேவி 11:31 லேவி 21:1 லேவி 21:11 புலம் 4:14 ஆகா 2:13 ரோம 5:12 2கொரி 6:17 எபே 2:1 எபிரெ 9:14 |
12 | அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் தன்னைச் சுத்திகரிக்கக்கடவன்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமலிருப்பானாகில் சுத்தமாகான். | எண் 19:17 எண் 19:18 சங் 51:7 எசே 36:25 அப் 15:9 வெளிப் 7:14 |
13 | செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும். | எண் 15:30 லேவி 5:3 லேவி 5:6 லேவி 5:17 லேவி 15:31 எபிரெ 2:2 எபிரெ 2:3 எபிரெ 10:29 வெளிப் 21:8 வெளிப் 22:11 வெளிப் 22:15 |
14 | கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள். |
15 | மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும். | எண் 31:20 லேவி 11:32 லேவி 14:36 |
16 | வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான். | எண் 19:11 எண் 31:19 |
17 | ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும். | ஆதி 26:19 உன்ன 4:15 யோவா 4:10 யோவா 4:11 யோவா 7:38 வெளிப் 7:17 |
18 | சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த ஜலத்திலே தோய்த்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளின்மேலும் அங்கேயிருக்கிற ஜனங்களின்மேலும் தெளிக்கிறதுமல்லாமல், எலும்பையாகிலும் வெட்டுண்டவனையாகிலும் செத்தவனையாகிலும் பிரேதக்குழியையாகிலும் தொட்டவன்மேலும் தெளிக்கக்கடவன். | எண் 19:9 சங் 51:7 எசே 36:25-27 யோவா 15:2 யோவா 15:3 யோவா 17:17 யோவா 17:19 1கொரி 1:30 எபிரெ 9:14 |
19 | சுத்தமாயிருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சாயங்காலத்திலே சுத்தமாயிருப்பான். | எபே 5:25-27 தீத் 2:14 தீத் 3:3-5 1யோவா 1:7 1யோவா 2:1 1யோவா 2:2 யூதா 1:23 வெளிப் 1:5 வெளிப் 1:6 |
20 | தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான். | எண் 19:13 எண் 15:30 ஆதி 17:14 மாற் 16:16 அப் 13:39-41 ரோம 2:4 ரோம 2:5 2பேது 3:14 வெளிப் 22:11 |
21 | தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். | லேவி 11:25 லேவி 11:40 லேவி 16:26-28 எபிரெ 7:19 எபிரெ 9:10 எபிரெ 9:13 எபிரெ 9:14 எபிரெ 10:4 |
22 | தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். | லேவி 7:19 ஆகா 2:13 |