1 | லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு, | எண் 26:9 எண் 26:10 எண் 27:3 யாத் 6:18 யாத் 6:21 யூதா 1:11 |
2 | இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி, | எண் 26:9 ஆதி 6:4 1நாளா 5:24 1நாளா 12:30 எசே 16:14 எசே 23:10 |
3 | மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள். | எண் 16:11 எண் 12:1 எண் 12:2 எண் 14:1-4 சங் 106:16 அப் 7:39 அப் 7:51 |
4 | மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான். | எண் 16:45 எண் 14:5 எண் 20:6 யோசு 7:6 |
5 | பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார். | மல்கி 3:18 2தீமோ 2:19 |
6 | ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லாரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு, | எண் 16:35-40 எண் 16:46-48 லேவி 10:1 லேவி 16:12 லேவி 16:13 1இரா 18:21-23 |
7 | நாளைக்கு அவைகளில் அக்கினி போட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள்; அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாயிருப்பான்; லேவியின் புத்திரராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் என்றான். | எண் 16:3 எண் 16:5 எபே 1:4 2தெச 2:13 1பேது 2:9 |
8 | பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்; |
9 | கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும், | எண் 16:13 ஆதி 30:15 1சாமு 18:23 2சாமு 7:19 ஏசா 7:13 எசே 34:18 1கொரி 4:3 |
10 | அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ? | நீதி 13:10 மத் 20:21 மத் 20:22 லூக் 22:24 ரோம 12:10 பிலிப் 2:3 3யோவா 1:9 |
11 | இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான். | எண் 16:3 1சாமு 8:7 லூக் 10:16 யோவா 13:20 ரோம 13:2 |
12 | பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை; | நீதி 29:9 ஏசா 3:5 1பேது 2:13 1பேது 2:14 யூதா 1:8 |
13 | இந்த வனாந்தரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டு வந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் துரைத்தனமும் பண்ணப்பார்கிறாயோ? | எண் 11:5 யாத் 1:11 யாத் 1:22 யாத் 2:23 |
14 | மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள். | எண் 36:8-10 யாத் 3:8 யாத் 3:17 லேவி 20:24 |
15 | அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக; நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான். | எண் 12:3 யாத் 32:19 மத் 5:22 மாற் 3:5 எபே 4:26 |
16 | பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள். | எண் 16:6 எண் 16:7 |
17 | உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான். | 1சாமு 12:7 |
18 | அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள். |
19 | அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது. | எண் 16:1 எண் 16:2 |
20 | கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி: |
21 | இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார். | ஆதி 19:15-22 எரே 5:16 அப் 2:40 2கொரி 6:17 எபே 5:6 எபே 5:7 வெளிப் 18:4 |
22 | அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள். | எண் 16:4 எண் 16:45 எண் 14:5 |
23 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: |
24 | கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார். | எண் 16:21 |
25 | உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள். | எண் 11:16 எண் 11:17 எண் 11:25 எண் 11:30 |
26 | அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான். | எண் 16:21-24 ஆதி 19:12-14 உபா 13:17 ஏசா 52:11 மத் 10:14 அப் 8:20 அப் 13:51 2கொரி 6:17 1தீமோ 5:22 வெளிப் 18:4 |
27 | அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்கள் பெண்ஜாதிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்கள் கூடாரவாசலிலே நின்றார்கள். | 2இரா 9:30 2இரா 9:31 யோபு 9:4 யோபு 40:10 யோபு 40:11 நீதி 16:18 நீதி 18:12 ஏசா 28:14 |
28 | அப்பொழுது மோசே: இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என் மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால், | யாத் 3:12 யாத் 4:1-9 யாத் 7:9 உபா 18:22 சகரி 2:9 சகரி 4:9 யோவா 5:36 யோவா 11:42 யோவா 14:11 |
29 | சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள். | யாத் 20:5 யாத் 32:34 யோபு 35:15 ஏசா 10:3 எரே 5:9 புலம் 4:22 |
30 | கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன் வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதேயானால், இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான். | யோபு 31:3 ஏசா 28:21 ஏசா 43:19 ஏசா 45:7 ஏசா 45:12 எரே 31:22 |
31 | அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது; | எண் 26:10 எண் 26:11 எண் 27:3 உபா 11:6 சங் 106:17 சங் 106:18 |
32 | பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது. | எண் 16:30 ஆதி 4:11 ஏசா 5:14 வெளிப் 12:16 |
33 | அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். | சங் 9:15 சங் 55:23 சங் 69:15 சங் 143:7 ஏசா 14:9 ஏசா 14:15 எசே 32:18 எசே 32:30 |
34 | அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள். | ஏசா 33:3 சகரி 14:5 வெளிப் 6:15-17 |
35 | அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப் போட்டது. | எண் 11:1 எண் 26:10 லேவி 10:2 சங் 106:18 |
36 | பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: |
37 | அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமாயின. | எண் 16:7 எண் 16:18 |
38 | தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார். | 1இரா 2:23 நீதி 1:18 நீதி 8:36 நீதி 20:2 ஆபகூ 2:10 |
39 | அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து, |
40 | ஆரோனின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும் அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான். | எண் 3:10 எண் 3:38 எண் 18:4-7 லேவி 22:10 2நாளா 26:18-20 யூதா 1:11 |
41 | மறுநாளில் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்று போட்டீர்கள் என்றார்கள். | எண் 16:1-7 எண் 14:2 சங் 106:13 சங் 106:23 சங் 106:25-48 ஏசா 26:11 |
42 | சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்துக்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, கர்த்தரின் மகிமை காணப்பட்டது. | எண் 16:19 எண் 14:10 எண் 20:6 யாத் 16:7 யாத் 16:10 யாத் 24:16 யாத் 40:34 யாத் 40:35 லேவி 9:23 |
43 | மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள்; |
44 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: |
45 | இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள். | எண் 16:21 எண் 16:24 எண் 16:26 |
46 | மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. வாதை தொடங்கிற்று என்றான். | லேவி 9:24 லேவி 10:1 லேவி 16:12 லேவி 16:13 ஏசா 6:6 ஏசா 6:7 ரோம 5:9 ரோம 5:10 எபிரெ 7:25-27 எபிரெ 9:25 எபிரெ 9:26 வெளிப் 8:3-5 |
47 | மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து, | மத் 5:44 ரோம 12:21 |
48 | செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது. | எண் 16:18 எண் 16:35 எண் 25:8-11 2சாமு 24:16 2சாமு 24:17 2சாமு 24:25 1நாளா 21:26 1நாளா 21:27 1தெச 1:10 1தீமோ 2:5 1தீமோ 2:6 எபிரெ 7:24 எபிரெ 7:25 யாக் 5:16 யோவா 5:14 |
49 | கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர். | எண் 16:32-35 எண் 25:9 1நாளா 21:14 எபிரெ 2:1-3 எபிரெ 10:28 எபிரெ 10:29 எபிரெ 12:25 |
50 | வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான். | எண் 16:43 1நாளா 21:26-30 |