இணை வசன வேதாகமம்

எண்ணாகமம் 12

                   
புத்தகங்களைக் காட்டு
1எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:மத் 10:36 மத் 12:48 யோவா 7:5 யோவா 15:20 கலா 4:16
2கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரே, எங்களைகொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.எண் 16:3 யாத் 4:30 யாத் 5:1 யாத் 7:10 யாத் 15:20 யாத் 15:21 மீகா 6:4
3மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.சங் 147:6 சங் 149:4 மத் 5:5 மத் 11:29 மத் 21:5 2கொரி 10:1 1தெச 2:7 யாக் 3:13 1பேது 3:4
4சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்று பேரும் ஆசரிப்புக்கூடாரத்துக்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.சங் 76:9
5கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.எண் 11:25 யாத் 34:5 யாத் 40:38 சங் 99:7
6அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.ஆதி 20:7 யாத் 7:1 சங் 105:15 மத் 23:31 மத் 23:34 மத் 23:37 லூக் 20:6 எபே 4:11 வெளிப் 11:3 வெளிப் 11:10
7என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.உபா 18:18 சங் 105:26 மத் 11:9 மத் 11:11 அப் 3:22 அப் 3:23 அப் 7:31
8நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன என்றார்.எண் 14:14 யாத் 33:11 உபா 34:10 1தீமோ 6:16
9கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார்.எண் 11:1 ஓசி 5:15
10மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான்.யாத் 33:7-10 எசே 10:4 எசே 10:5 எசே 10:18 எசே 10:19 ஓசி 9:12 மத் 25:41
11அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.யாத் 12:32 1சாமு 2:30 1சாமு 12:19 1சாமு 15:24 1சாமு 15:25 1இரா 13:6 எரே 42:2 அப் 8:24 வெளிப் 3:9
12தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாதிருப்பாளாக என்றான்.சங் 88:4 சங் 88:5 எபே 2:1-5 கொலோ 2:13 1தீமோ 5:6
13அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.எண் 14:2 எண் 14:13-20 எண் 16:41 எண் 16:46-50 யாத் 32:10-14 1சாமு 12:23 1சாமு 15:11 மத் 5:44 மத் 5:45 லூக் 6:28 லூக் 23:34 அப் 7:60 ரோம 12:21 யாக் 5:15
14கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார்.உபா 25:9 யோபு 30:10 ஏசா 50:6 மத் 26:67 எபிரெ 12:9
15அப்படியே மிரியாம் ஏழு நாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கபட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள்.உபா 24:8 உபா 24:9
16பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.எண் 11:35 எண் 33:18

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.