| 1 | யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம் வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி: | எரே 27:1 |
| 2 | இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன். | எரே 27:2-12 எசே 13:5-16 மீகா 3:11 |
| 3 | பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்து பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக் கொண்டுவரப்பண்ணுவேன். | ஆதி 47:9 ஆதி 47:28 சங் 90:10 |
| 4 | யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான். | எரே 22:24 எரே 22:28 எரே 24:1 எரே 52:31-34 2இரா 25:27-30 |
| 5 | அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், கர்த்தருடைய ஆலயத்தில் நின்றிருந்த ஜனங்களெல்லாரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி: | எரே 28:1 எரே 7:2 எரே 19:14 எரே 26:2 |
| 6 | ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவாரென்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக. | எண் 5:22 உபா 27:15-26 1இரா 1:36 1நாளா 16:36 சங் 41:13 சங் 72:19 சங் 89:52 சங் 106:48 மத் 6:13 மத் 28:20 1கொரி 14:16 2கொரி 1:20 வெளிப் 1:18 வெளிப் 3:14 வெளிப் 5:14 வெளிப் 19:4 வெளிப் 22:20 வெளிப் 22:21 |
| 7 | ஆகிலும், உன் செவிகளும் சகல ஜனத்தின் செவிகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள். | 1இரா 22:28 |
| 8 | பூர்வகாலமுதல் எனக்குமுன்னும் உனக்குமுன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு விரோதமாகவும், பெரிய ராஜ்யங்களுக்கு விரோதமாகவும், யுத்தத்தையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். | லேவி 26:14-46 உபா 4:26 உபா 4:27 உபா 28:15-68 உபா 29:18-28 உபா 31:16 உபா 31:17 உபா 32:15-44 1சாமு 2:27-32 1சாமு 3:11-14 1இரா 14:7-15 1இரா 17:1 1இரா 21:18-24 1இரா 22:8 ஏசா 5:1-8 ஏசா 6:9-12 ஏசா 13:18 ஏசா 24:1-23 யோவே 1:2-20 யோவே 3:1-11 மீகா 3:8-12 நாகூ 1:1-3 ஆமோ 1:2 |
| 9 | சமாதானம் வரும் என்று தீர்க்கதிரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான். | எரே 4:10 எரே 6:14 எரே 8:11 எரே 14:13 எசே 13:10 எசே 13:16 |
| 10 | அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான். | எரே 28:2 எரே 28:4 எரே 27:2 எரே 36:23 எரே 36:24 1இரா 22:11 1இரா 22:24 1இரா 22:25 மல்கி 3:13 |
| 11 | பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப் பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியே போனான். | எரே 23:17 எரே 29:9 1இரா 13:18 1இரா 22:6 1இரா 22:11 1இரா 22:12 2நாளா 18:10 2நாளா 18:22 2நாளா 18:23 நீதி 14:7 எசே 13:7 |
| 12 | அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்ட பிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்: | எரே 1:2 எரே 29:30 2இரா 20:4 1நாளா 17:3 தானி 9:2 |
| 13 | நீ போய், அனனியாவை நோக்கி: நீ மரநுகத்தை உடைத்தாய்; அதற்குப்பதிலாக இருப்பு நுகத்தை உண்டுபண்ணு என்று கர்த்தர் சொன்னார். | எரே 27:15 சங் 149:8 புலம் 2:14 |
| 14 | பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். | எரே 27:4 எரே 27:7 எரே 40:4 உபா 4:20 உபா 28:48 ஏசா 14:4-6 |
| 15 | பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய். | எரே 28:11 எரே 14:14 எரே 14:15 எரே 23:21 எரே 27:15 எரே 29:23 எரே 29:31 எரே 29:32 1இரா 22:23 எசே 13:2 எசே 13:3 எசே 13:22 எசே 22:28 புலம் 2:14 சகரி 13:3 |
| 16 | ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான். | ஆதி 7:4 யாத் 32:12 உபா 6:15 1இரா 13:34 ஆமோ 9:8 |
| 17 | அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான். | ஏசா 44:25 ஏசா 44:26 சகரி 1:6 |