| 1 | பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும் கொல்லரையும் சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார். | ஆமோ 3:7 ஆமோ 7:1 ஆமோ 7:4 ஆமோ 7:7 ஆமோ 8:1 சகரி 1:20 சகரி 3:1 |
| 2 | ஒரு கூடையிலே முதல் கந்தாயத்து அத்திப்பழங்களுக்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்றக் கூடையிலே புசிக்கத்தகாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது. | எரே 24:5-7 ஓசி 9:10 மீகா 7:1 |
| 3 | கர்த்தர் என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ புசிக்கத்தகாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன். | எரே 1:11-14 1சாமு 9:9 ஆமோ 7:8 ஆமோ 8:2 சகரி 4:2 சகரி 5:2 சகரி 5:5-11 மத் 25:32 மத் 25:33 |
| 4 | அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 5 | நான் இவ்விடத்திலிருந்து, கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப் போகவிட்ட யூதரை நான் இந்த நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்களை அங்கிகரிப்பேன். | நாகூ 1:7 சகரி 13:9 மத் 25:12 யோவா 10:27 1கொரி 8:3 கலா 4:9 2தீமோ 2:19 |
| 6 | அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக்கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன். | எரே 21:10 உபா 11:12 2நாளா 16:9 நெகே 5:19 யோபு 33:27 யோபு 33:28 சங் 34:15 1பேது 3:12 |
| 7 | நான் கர்த்தர் என்று அறியும், இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். | எரே 31:33 எரே 31:34 எரே 32:39 உபா 30:6 எசே 11:19 எசே 11:20 எசே 36:24-28 |
| 8 | புசிக்கத்தகாத கெட்ட அத்திப்பழங்களைத் தள்ளிவிடுவதுபோல, நான் சிதேக்கியா என்கிற யூதாவின் ராஜாவையும் அவனுடைய பிரபுக்களையும், இந்த தேசத்திலே மீதியான எருசலேமின் குடிகளையும், எகிப்து தேசத்தில் குடியிருக்கிறவர்களையும் தள்ளிவிட்டு, | எரே 24:2 எரே 24:5 எரே 29:16-18 |
| 9 | அவர்களுக்குத் தீமையுண்டாக அவர்களை பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா இடங்களிலும் நிந்தையாகவும், பழமொழியாகவும், வசைச்சொல்லாகவும், சாபமாகவும் வைத்து, | எரே 15:4 எரே 34:17 உபா 28:25 உபா 28:37 உபா 28:65-67 எசே 5:1 எசே 5:2 எசே 5:12 எசே 5:13 |
| 10 | அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் அவர்கள் இராதபடிக்கு நிர்மூலமாகுமட்டும், அவர்களுக்குள்ளே பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளை நோயையும் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 5:12 எரே 9:16 எரே 14:15 எரே 14:16 எரே 15:2 எரே 16:4 எரே 19:7 எரே 34:17 ஏசா 51:19 எசே 5:12-17 எசே 6:12-14 எசே 7:15 எசே 14:12-21 எசே 33:27 |