1 | பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு. | யாத் 9:13 யாத் 3:18 யாத் 4:22 யாத் 4:23 யாத் 5:1 யாத் 8:1 யாத் 8:20 யாத் 10:3 |
2 | நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்தாயாகில், | யாத் 4:23 யாத் 8:2 யாத் 10:4 லேவி 26:14-16 லேவி 26:23-16 லேவி 26:24-16 லேவி 26:27-16 லேவி 26:28-16 சங் 7:11 சங் 7:12 சங் 68:21 ஏசா 1:20 ரோம 2:8 வெளிப் 2:21 வெளிப் 2:22 வெளிப் 16:9 |
3 | கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின் மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளை நோய் உண்டாகும். | யாத் 7:4 யாத் 8:19 1சாமு 5:6-11 1சாமு 6:9 அப் 13:11 |
4 | கர்த்தர் இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார். | யாத் 8:22 யாத் 10:23 யாத் 12:13 ஏசா 65:13 ஏசா 65:14 மல்கி 3:18 |
5 | மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார். | யாத் 9:18 யாத் 8:23 யாத் 10:4 எண் 16:5 யோபு 24:1 பிரச 3:1-11 எரே 28:16 எரே 28:17 மத் 27:63 மத் 27:64 |
6 | மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை. | யாத் 9:19 யாத் 9:25 சங் 78:48 சங் 78:50 |
7 | பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை. | யாத் 9:12 யாத் 7:14 யாத் 8:32 யோபு 9:4 நீதி 29:1 ஏசா 48:4 தானி 5:20 ரோம 9:18 |
8 | அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன். | யாத் 8:16 |
9 | அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப்பண்ணும் என்றார். | லேவி 13:18-20 உபா 28:27 உபா 28:35 யோபு 2:7 வெளிப் 16:2 |
10 | அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று. | உபா 28:27 |
11 | அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர் எல்லார்மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்களின் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது. | யாத் 7:11 யாத் 7:12 யாத் 8:18 யாத் 8:19 ஏசா 47:12-14 2தீமோ 3:8 2தீமோ 3:9 வெளிப் 16:2 |
12 | ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. | யாத் 4:21 யாத் 7:13 யாத் 7:14 சங் 81:11 சங் 81:12 வெளிப் 16:10 வெளிப் 16:11 |
13 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு. | யாத் 9:1 யாத் 7:15 யாத் 8:20 |
14 | விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர்மேலும் உன் ஜனங்கள்மேலும் அனுப்புவேன். | லேவி 26:18 லேவி 26:21 லேவி 26:28 உபா 28:15-17 உபா 28:59-61 உபா 29:20-22 உபா 32:39-42 1சாமு 4:8 1இரா 8:38 எரே 19:8 மீகா 6:13 வெளிப் 18:8 வெளிப் 22:18 |
15 | நீ பூமியில் இராமல் நாசமாய்ப்போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன். | யாத் 9:3 யாத் 9:6 யாத் 9:16 யாத் 3:20 |
16 | என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன். | யாத் 14:17 சங் 83:17 சங் 83:18 நீதி 16:4 ரோம 9:17 ரோம 9:22 1பேது 2:8 1பேது 2:19 யூதா 1:4 |
17 | நீ என் ஜனங்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா? | யோபு 9:4 யோபு 15:25 யோபு 15:26 யோபு 40:9 ஏசா 10:15 ஏசா 26:11 ஏசா 37:23 ஏசா 37:24 ஏசா 37:29 ஏசா 45:9 அப் 12:23 1கொரி 10:22 |
18 | எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப்பண்ணுவேன். | 1இரா 19:2 1இரா 20:6 2இரா 7:1 2இரா 7:18 |
19 | இப்பொழுதே ஆள் அனுப்பி, உன் மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகத்தக்கதாய் அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல் என்றார். | ஆபகூ 3:2 |
20 | பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப்பண்ணினான். | நீதி 16:16 நீதி 22:3 நீதி 22:23 யோனா 3:5 யோனா 3:6 மாற் 13:14-16 எபிரெ 11:7 |
21 | எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற்போனானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான். | யாத் 7:23 1சாமு 4:20 1நாளா 22:19 யோபு 7:17 யோபு 34:14 நீதி 24:32 எசே 40:4 தானி 10:12 |
22 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர் வகைகள்மேலும் கல்மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார். | யாத் 7:19 யாத் 8:5 யாத் 8:16 வெளிப் 16:21 |
23 | அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று; எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்; | யாத் 19:16 யாத் 20:18 1சாமு 12:17 1சாமு 12:18 யோபு 37:1-5 சங் 29:3 சங் 77:18 வெளிப் 16:18 வெளிப் 16:21 |
24 | கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை. | யாத் 9:23 யாத் 10:6 மத் 24:21 |
25 | எகிப்து தேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது. | சங் 105:33 |
26 | இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலே மாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது. | யாத் 8:22-32 யாத் 9:4 யாத் 9:6 யாத் 10:23 யாத் 11:7 யாத் 12:13 ஏசா 32:18 ஏசா 32:19 |
27 | அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நான் இந்த முறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர். | யாத் 10:16 எண் 22:34 1சாமு 15:24 1சாமு 15:30 1சாமு 26:21 மத் 27:4 |
28 | இது போதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை என்றான். | யாத் 8:8 யாத் 8:28 யாத் 10:17 அப் 8:24 |
29 | மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர். | யாத் 9:33 1இரா 8:22 1இரா 8:38 2நாளா 6:12 2நாளா 6:13 எஸ்றா 9:5 யோபு 11:13 சங் 143:6 ஏசா 1:15 |
30 | ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான். | நீதி 16:6 ஏசா 26:10 ஏசா 63:17 |
31 | அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று. | ரூத் 1:22 ரூத் 2:23 ஆமோ 4:9 ஆபகூ 3:17 |
32 | கோதுமையும் கம்பும் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை. | யாத் 10:22 |
33 | மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது. | யாத் 9:29 யாத் 8:12 |
34 | மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம்செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள். | யாத் 8:15 பிரச 8:11 |
35 | கர்த்தர் மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை. |