1 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
2 | நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து, | யாத் 33:12 யாத் 33:17 யாத் 35:30 யாத் 36:1 ஏசா 45:3 ஏசா 45:4 மாற் 3:16-19 யோவா 3:27 |
3 | விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், | யாத் 35:31 1இரா 3:9 1இரா 7:14 ஏசா 28:6 ஏசா 28:26 1கொரி 12:4-11 |
4 | இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும், | யாத் 25:32-35 யாத் 26:1 யாத் 28:15 1இரா 7:14 2நாளா 2:7 2நாளா 2:13 2நாளா 2:14 |
5 | மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன். | யாத் 28:9-21 |
6 | மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் செய்வார்கள். | யாத் 4:14 யாத் 4:15 யாத் 6:26 எஸ்றா 5:1 எஸ்றா 5:2 பிரச 4:9-12 மத் 10:2-4 லூக் 10:1 அப் 13:2 அப் 15:39 அப் 15:40 |
7 | ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும், | யாத் 26:1-37 யாத் 27:9-19 யாத் 36:8-38 |
8 | மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும், | யாத் 25:23-30 யாத் 37:10-16 |
9 | தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும், | யாத் 27:1-8 யாத் 38:1-7 |
10 | ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும், | யாத் 28:1-43 யாத் 39:1-43 லேவி 8:7 லேவி 8:8 லேவி 8:13 எண் 4:5-14 |
11 | அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார். | யாத் 30:23-33 யாத் 37:29 |
12 | மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்: |
13 | நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். | யாத் 20:8-11 லேவி 19:3 லேவி 19:30 லேவி 23:3 லேவி 25:2 லேவி 26:2 |
14 | ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். | யாத் 20:8 உபா 5:12-15 நெகே 9:14 ஏசா 56:2-6 ஏசா 58:13 ஏசா 58:14 எசே 20:12 எசே 44:24 |
15 | ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். | யாத் 31:17 யாத் 16:26 யாத் 20:9 யாத் 34:21 லேவி 23:3 எசே 46:1 லூக் 13:14 |
16 | ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள். | ஆதி 9:13 ஆதி 17:11 எரே 50:5 |
17 | அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார். | யாத் 31:13 எசே 20:12 எசே 20:20 |
18 | சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார். | யாத் 24:12 யாத் 24:18 யாத் 32:15 யாத் 32:16 யாத் 34:1-4 யாத் 34:28-4 யாத் 34:29-4 உபா 4:13 உபா 5:22 உபா 9:9-11 2கொரி 3:3 |