இணை வசன வேதாகமம்

யாத்திராகமம் 23

                   
புத்தகங்களைக் காட்டு
1அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.யாத் 23:7 யாத் 20:16 லேவி 19:16 2சாமு 16:3 2சாமு 19:27 சங் 15:3 சங் 101:5 சங் 120:3 நீதி 10:18 நீதி 17:4 நீதி 25:23 எரே 20:10 மத் 28:14 மத் 28:15 ரோம 3:8
2தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.யாத் 32:1-5 ஆதி 6:12 ஆதி 7:1 ஆதி 19:4 ஆதி 19:7-9 எண் 14:1-10 யோசு 24:15 1சாமு 15:9 1இரா 19:10 யோபு 31:34 நீதி 1:10 நீதி 1:11 நீதி 1:15 நீதி 4:14 மத் 27:24-26 மாற் 15:15 லூக் 23:23 லூக் 23:24 லூக் 23:51 யோவா 7:50 யோவா 7:51 அப் 24:27 அப் 25:9 ரோம 1:32 கலா 2:11-13
3வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.சங் 82:2 சங் 82:3 யாக் 3:17
4உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.உபா 22:1-4 யோபு 31:29 யோபு 31:30 நீதி 24:17 நீதி 24:18 நீதி 25:21 மத் 5:44 லூக் 6:27 லூக் 6:28 ரோம 12:17-21 1தெச 5:15
5உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக்கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.உபா 22:4
6உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக.யாத் 23:2 யாத் 23:3 உபா 16:19 உபா 27:19 2நாளா 19:7 யோபு 31:13 யோபு 31:21 யோபு 31:22 சங் 82:3 சங் 82:4 பிரச 5:8 ஏசா 10:1 ஏசா 10:2 எரே 5:28 எரே 6:28 எரே 7:6 ஆமோ 5:11 ஆமோ 5:12 மீகா 3:1-4 செப் 3:1-4 மல்கி 3:5 யாக் 2:5 யாக் 2:6
7கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.யாத் 23:1 லேவி 19:11 உபா 19:16-21 யோபு 22:23 நீதி 4:14 நீதி 4:15 ஏசா 33:15 லூக் 3:14 எபே 4:25 1தெச 5:22
8பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.உபா 16:19 1சாமு 8:3 1சாமு 12:3 சங் 26:10 நீதி 15:27 நீதி 17:8 நீதி 17:23 நீதி 19:4 பிரச 7:7 ஏசா 1:13 ஏசா 5:23 எசே 22:12 ஓசி 4:18 ஆமோ 5:12 மீகா 7:3
9அந்நியனை ஒடுக்காயாக; எகிப்துதேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.யாத் 21:21 உபா 10:19 உபா 24:14-18 உபா 27:19 சங் 94:6 எசே 22:7
10ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.
11ஏழாம் வருஷத்தில் உன் ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும், மீதியானதை வெளியின் ஜெந்துக்கள் தின்னவும், அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடுவாயாக; உன் திராட்சத்தோட்டத்தையும் உன் ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்வாயாக.லேவி 25:2-7 லேவி 25:11-7 லேவி 25:12-7 லேவி 25:20-7 லேவி 25:22-7 லேவி 26:34 லேவி 26:35
12ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.யாத் 20:8-11 யாத் 31:15 யாத் 31:16 லூக் 13:14
13நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.உபா 4:9 உபா 4:15 யோசு 22:5 யோசு 23:11 1நாளா 28:7-9 சங் 39:1 எபே 5:15 1தீமோ 4:16 எபிரெ 12:15
14வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப்பண்டிகை ஆசரிப்பாயாக.யாத் 34:22 லேவி 23:5 லேவி 23:16 லேவி 23:34 உபா 16:16
15புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்தகாலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்.யாத் 12:14-28 யாத் 12:43-49 யாத் 13:6 யாத் 13:7 யாத் 34:18 லேவி 23:5-8 எண் 9:2-14 எண் 28:16-25 உபா 16:1-8 யோசு 5:10 யோசு 5:11 2இரா 23:21-23 மாற் 14:12 லூக் 22:7 1கொரி 5:7 1கொரி 5:8
16நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.யாத் 22:29 யாத் 34:22 லேவி 23:9-21 எண் 28:26-31 உபா 16:9-12 அப் 2:1
17வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள்.யாத் 34:23 உபா 12:5 உபா 16:16 உபா 31:11 சங் 84:7 லூக் 2:42
18எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.யாத் 12:8 யாத் 12:15 யாத் 34:25 லேவி 2:11 லேவி 7:12 உபா 16:4
19உன் நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.யாத் 22:29 யாத் 34:26 லேவி 23:10-17 எண் 18:12 எண் 18:13 உபா 12:5-7 உபா 26:10 நெகே 10:35 1கொரி 15:20 வெளிப் 14:4
20வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.யாத் 3:2-6 யாத் 14:19 யாத் 32:34 யாத் 33:2 யாத் 33:14 ஆதி 48:16 எண் 20:16 யோசு 5:13 யோசு 6:2 சங் 91:11 ஏசா 63:9 மல்கி 3:1 1கொரி 10:9 1கொரி 10:10
21அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.சங் 2:12 மத் 17:5 எபிரெ 12:25
22நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.ஆதி 12:3 எண் 24:9 உபா 30:7 எரே 30:20 சகரி 2:8 அப் 9:4 அப் 9:5
23என் தூதனானவர் உனக்குமுன்சென்று, எமோரியரும், ஏத்தியரும், பெரிசியரும், கானானியரும், ஏவியரும், எபூசியரும், இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.யாத் 23:20 யாத் 32:2 ஏசா 5:13
24நீ அவர்களுடைய தேவர்களைப்பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.யாத் 20:5
25உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.உபா 6:13 உபா 10:12 உபா 10:20 உபா 11:13 உபா 11:14 உபா 13:4 உபா 28:1-6 யோசு 22:5 யோசு 24:14 யோசு 24:15 யோசு 24:21 யோசு 24:24 1சாமு 7:3 1சாமு 12:20 1சாமு 12:24 எரே 8:2 மத் 4:10
26கர்ப்பம் விழுகிறதும், மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன்.உபா 7:14 உபா 28:4 யோபு 21:10 சங் 107:38 சங் 144:13 மல்கி 3:10 மல்கி 3:11
27எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையும் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.யாத் 15:14-16 ஆதி 35:5 உபா 2:25 உபா 11:23 உபா 11:25 யோசு 2:9-11 1சாமு 14:15 2இரா 7:6 2நாளா 14:14
28உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.உபா 7:20 யோசு 24:11
29தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,உபா 7:22 யோசு 15:63 யோசு 16:10 யோசு 17:12 யோசு 17:13 நியா 3:1-4
30நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.
31சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.ஆதி 15:18 எண் 34:3-15 உபா 11:24 யோசு 1:4 1இரா 4:21 1இரா 4:24 சங் 72:8
32அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கைபண்ணாதிருப்பாயாக.யாத் 34:12 யாத் 34:15 உபா 7:2 யோசு 9:14-23 2சாமு 21:1 2சாமு 21:2 சங் 106:35 2கொரி 6:15
33அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்கவேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.1இரா 14:16 2நாளா 33:9

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.