இணை வசன வேதாகமம்

யாத்திராகமம் 21

                   
புத்தகங்களைக் காட்டு
1மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன:லேவி 18:5 லேவி 18:26 லேவி 19:37 லேவி 20:22 எண் 35:24 எண் 36:13 உபா 5:1 உபா 5:31 உபா 6:20 1இரா 6:12 2நாளா 19:10 நெகே 9:13 நெகே 9:14 நெகே 10:29 சங் 147:19 எசே 20:11 எசே 20:25 மல்கி 4:4
2எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால், அவன் ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலைப்பெற்றுப் போகக்கடவன்.யாத் 12:44 யாத் 22:3 ஆதி 27:28 ஆதி 27:36 லேவி 25:39-41 லேவி 25:44-41 2இரா 4:1 நெகே 5:1-5 நெகே 5:8-5 மத் 18:25 1கொரி 6:20
3ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்; விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானால், அவன் பெண்ஜாதி அவனோடேகூடப் போகக்கடவள்.உபா 15:12-14
4அவன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன்.
5அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்,உபா 15:16 உபா 15:17 ஏசா 26:13 2கொரி 5:14 2கொரி 5:15
6அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினால் குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.யாத் 21:22 யாத் 12:12 யாத் 18:21-26 யாத் 22:8 யாத் 22:9 யாத் 22:28 எண் 25:5-8 உபா 1:16 உபா 16:18 உபா 19:17 உபா 19:18 1சாமு 8:1 1சாமு 8:2 ஏசா 1:26 செப் 3:3
7ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது.நெகே 5:5
8அவளைத் தனக்கு நியமித்துக்கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை.ஆதி 28:8 நியா 14:3 1சாமு 8:6 1சாமு 18:8
9அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன்.
10அவன் வேறொரு பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக.1கொரி 7:1-6
11இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப்போகக்கடவள்.
12ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.யாத் 20:13 ஆதி 9:6 லேவி 24:17 எண் 35:16-24 எண் 35:30-24 எண் 35:31-24 உபா 19:11-13 2சாமு 12:13 மத் 26:52
13ஒருவன் பதிவிருந்து கொல்லாமல், தேவச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய ஸ்தலத்தை உனக்கு நியமிப்பேன்.எண் 35:11 எண் 35:22 உபா 19:4-6 உபா 19:11-6 மீகா 7:2
14ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என்பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும்.எண் 15:30 எண் 15:31 உபா 1:43 உபா 17:12 உபா 17:13 உபா 18:22 உபா 19:11-13 1இரா 2:29-34 சங் 19:13 எபிரெ 10:26 2பேது 2:10
15தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.உபா 21:18-21 உபா 27:24 நீதி 30:11 நீதி 30:17 1தீமோ 1:9
16ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.ஆதி 40:15 உபா 24:7 1தீமோ 1:10 வெளிப் 18:12
17தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.லேவி 20:9 உபா 27:16 நீதி 20:20 நீதி 30:11 நீதி 30:17 மத் 15:3-6 மாற் 7:10 மாற் 7:11
18மனிதர் சண்டைபண்ணி, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலாவது கையால் அடித்ததினாலாவது அவன் சாவாமல் கட்டில் கிடையாய்க்கிடந்து,யாத் 21:22 யாத் 2:13 உபா 25:11 2சாமு 14:6
19திரும்ப எழுந்திருந்து வெளியிலே தன் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்; ஆனாலும் அவனுக்கு வேலை மினக்கெட்ட நஷ்டத்தைக் கொடுத்து, அவனை நன்றாய்க் குணமாக்குவிக்கக்கடவன்.2சாமு 3:29 சகரி 8:4
20ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.யாத் 21:26 யாத் 21:27 உபா 19:21 நீதி 29:19 ஏசா 58:3 ஏசா 58:4
21ஒரு நாளாவது இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், அவர்கள் அவனுடைய உடைமையாகையால், பழிவாங்கவேண்டியதில்லை.லேவி 25:45 லேவி 25:46
22மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால், அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும்.யாத் 21:30 உபா 16:18 உபா 22:18 உபா 22:19
23வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,எண் 35:31
24கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,யாத் 21:26 யாத் 21:27 லேவி 24:19 லேவி 24:20 உபா 19:21 நியா 1:6 நியா 1:7 1சாமு 15:33 மத் 5:38-40 மத் 7:2 லூக் 6:38 வெளிப் 16:6
25சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.
26ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால், அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலை பண்ணிவிடவேண்டும்.யாத் 21:20 உபா 16:19 நெகே 5:5 யோபு 31:13-15 சங் 9:12 சங் 10:14 சங் 10:18 சங் 72:12-14 நீதி 22:22 நீதி 22:23 எபே 6:9 கொலோ 4:1
27அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால், அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.
28ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரியையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்.யாத் 21:32 ஆதி 9:5 ஆதி 9:6 லேவி 20:15 லேவி 20:16
29தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும்.உபா 21:1-9
30அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதானால், அவன் தன் ஜீவனை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கக்கடவன்.யாத் 21:22 யாத் 30:12 எண் 35:31-33 நீதி 13:8
31அது ஒருவன் மகனை முட்டினாலும் சரி, ஒருவன் மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும்.
32அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு அடிமைப்பெண்ணையாவது முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு கல்லெறியப்படவேண்டும்.ஆதி 37:28 சகரி 11:12 சகரி 11:13 மத் 26:15 மத் 27:3-9 பிலிப் 2:7
33ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால்,சங் 9:15 சங் 119:85 நீதி 28:10 பிரச 10:8 எரே 18:20 எரே 18:22
34குழிக்கு உடையவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தின் எஜமானுக்குக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.யாத் 21:29 யாத் 21:30 யாத் 22:6 யாத் 22:14
35ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டினதினால் அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் கிரயத்தைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள்.
36அந்த மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாக வேண்டும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.