இணை வசன வேதாகமம்

யாத்திராகமம் 19

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.யாத் 12:2 யாத் 12:6 லேவி 23:16-18
2அவர்கள் ரெவிதீமிலிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்து, அந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேலர் அங்கே மலைக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.யாத் 17:1 யாத் 17:8
3மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,யாத் 20:21 யாத் 24:15-18 யாத் 34:2 உபா 5:5-31 அப் 7:38
4நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.யாத் 7:1-14 உபா 4:9 உபா 4:33-36 உபா 29:2 ஏசா 63:9
5இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைகொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.யாத் 23:22 யாத் 24:7 உபா 11:27 உபா 28:1 யோசு 24:24 1சாமு 15:22 ஏசா 1:19 எரே 7:23 எரே 11:4-7 எபிரெ 11:8
6நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.உபா 33:2-4 ஏசா 61:6 ரோம 12:1 1பேது 2:5 1பேது 2:9 வெளிப் 1:6 வெளிப் 5:10 வெளிப் 20:6
7மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.யாத் 3:16
8அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான்.யாத் 20:19 யாத் 24:3 யாத் 24:7 உபா 5:27-29 உபா 26:17-19 யோசு 24:24 நெகே 10:29
9அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான்.யாத் 19:16 யாத் 20:21 யாத் 24:15 யாத் 24:16 உபா 4:11 1இரா 8:12 2நாளா 6:1 சங் 18:11 சங் 18:12 சங் 97:2 ஏசா 19:1 மத் 17:5 மாற் 9:7 லூக் 9:34 லூக் 9:35 வெளிப் 1:7
10பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து,யாத் 19:15 லேவி 11:44 லேவி 11:45 யோசு 3:5 யோசு 7:13 1சாமு 16:5 2நாளா 29:5 2நாளா 29:34 2நாளா 30:17-19 யோபு 1:5 1கொரி 6:11
11மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய் மலையின்மேல் இறங்குவார்.யாத் 19:16 யாத் 19:18 யாத் 19:20 யாத் 3:8 யாத் 34:5 எண் 11:17 உபா 33:2 சங் 18:9 சங் 144:5 ஏசா 64:1 ஏசா 64:2 ஆபகூ 3:3-6 யோவா 3:13 யோவா 6:38
12ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.யாத் 19:21 யாத் 19:23 யோசு 3:4
13ஒரு கையும் அதைத்தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.யாத் 21:28 யாத் 21:29 லேவி 20:15 லேவி 20:16
14மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.
15அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.ஆமோ 4:12 மல்கி 3:2 மத் 3:10-12 மத் 24:44 2பேது 3:11 2பேது 3:12
16மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.யாத் 9:23 யாத் 9:28 யாத் 9:29 யாத் 20:18 1சாமு 12:17 1சாமு 12:18 யோபு 37:1-5 யோபு 38:25 சங் 18:11-14 சங் 29:3-11 சங் 50:3 சங் 77:18 சங் 97:4 எபிரெ 12:18 எபிரெ 12:19 வெளிப் 4:5 வெளிப் 8:5 வெளிப் 11:19
17அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.உபா 4:10 உபா 5:5
18கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.யாத் 20:18 உபா 4:11 உபா 4:12 உபா 5:22 உபா 33:2 நியா 5:5 சங் 68:7 சங் 68:8 சங் 104:32 சங் 144:5
19எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.யாத் 19:13 யாத் 19:16
20கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.யாத் 19:11 நெகே 9:13 சங் 81:7
21அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.யாத் 19:12 யாத் 19:13
22கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.யாத் 24:5 லேவி 10:1-3 ஏசா 52:11
23அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.யாத் 19:12 யோசு 3:4 யோசு 3:5
24கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள் என்றார்.யாத் 19:12 யாத் 19:21 மத் 11:12 லூக் 13:24 லூக் 16:16 யோவா 1:17 எபிரெ 4:16 எபிரெ 10:19-22 எபிரெ 12:18-25 எபிரெ 12:29-25
25அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.