| 1 | கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர். | சங் 42:1 |
| 2 | உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா) | சங் 32:1 சங் 79:8 சங் 79:9 எரே 50:20 மீகா 7:18 அப் 13:39 கொலோ 2:13 |
| 3 | உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர். | ஏசா 6:7 ஏசா 12:1 ஏசா 54:7-10 யோவா 1:29 |
| 4 | எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும். | சங் 80:3 சங் 80:7 சங் 80:19 எரே 31:18 புலம் 5:21 மல்கி 4:6 |
| 5 | என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ? | சங் 74:1 சங் 77:9 சங் 79:5 சங் 80:4 சங் 89:46 ஏசா 64:9-12 மீகா 7:18 |
| 6 | உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ? | சங் 80:18 சங் 138:7 எஸ்றா 9:8 எஸ்றா 9:9 ஏசா 57:15 ஓசி 6:2 ஆபகூ 3:2 |
| 7 | கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும். | சங் 50:23 சங் 91:16 எரே 42:12 |
| 8 | கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக. | ஆபகூ 2:1 எபிரெ 12:25 |
| 9 | நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. | சங் 24:4 சங் 24:5 சங் 50:23 சங் 119:155 ஏசா 46:13 மாற் 12:32-34 யோவா 7:17 அப் 10:2-4 அப் 11:13 அப் 11:14 அப் 13:16 |
| 10 | கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். | சங் 89:14 சங் 100:5 யாத் 34:6 யாத் 34:7 மீகா 7:20 லூக் 1:54 லூக் 1:55 யோவா 1:17 |
| 11 | சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும். | ஏசா 4:2 ஏசா 45:8 ஏசா 53:2 யோவா 14:6 1யோவா 5:20 1யோவா 5:21 |
| 12 | கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். | சங் 84:11 மீகா 6:8 1கொரி 1:30 எபே 1:3 யாக் 1:17 |
| 13 | நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும். | சங் 72:2 சங் 72:3 சங் 89:14 ஏசா 58:8 |