| 1 | தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும். | சங் 28:1 சங் 35:22 சங் 44:23 சங் 50:3 சங் 109:1 சங் 109:2 |
| 2 | இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள். | சங் 2:1 சங் 2:2 சங் 74:4 சங் 74:23 2இரா 19:28 ஏசா 37:29 எரே 1:19 மத் 27:24 அப் 4:25-27 அப் 16:22 அப் 17:5 அப் 19:28-41 அப் 21:30 அப் 22:22 அப் 23:10 |
| 3 | உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள். | சங் 10:9 சங் 56:6 சங் 64:2 1சாமு 13:19 ஏசா 7:6 ஏசா 7:7 லூக் 20:20-23 |
| 4 | அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள். | யாத் 1:10 எஸ்தர் 3:6-9 நீதி 1:12 எரே 11:19 எரே 31:36 தானி 7:25 மத் 27:62-66 அப் 4:17 அப் 9:1 அப் 9:2 |
| 5 | இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும், | சங் 2:2 நீதி 21:30 ஏசா 7:5-7 ஏசா 8:9 ஏசா 8:10 யோவா 11:47-53 அப் 23:12 அப் 23:13 வெளிப் 17:13 வெளிப் 19:19 |
| 6 | கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும், | 2நாளா 20:1 2நாளா 20:10 2நாளா 20:11 |
| 7 | ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். | யோசு 13:5 எசே 27:9 |
| 8 | அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா) | ஆதி 10:11 |
| 9 | மீதியானியருக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு, | எண் 31:7 எண் 31:8 நியா 7:22-25 ஏசா 9:4 ஏசா 10:26 |
| 10 | நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும். | யோசு 17:11 1சாமு 28:7 |
| 11 | அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும். | நியா 7:25 |
| 12 | தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே. | சங் 83:4 சங் 74:7 சங் 74:8 2நாளா 20:11 |
| 13 | என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும். | சங் 22:1 சங் 44:4 சங் 74:11 சங் 74:12 |
| 14 | நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும், | ஏசா 30:33 ஏசா 33:11 ஏசா 33:12 ஏசா 64:1 ஏசா 64:2 எசே 20:47 எசே 20:48 மல்கி 4:1 |
| 15 | நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும். | சங் 11:6 சங் 50:3 சங் 58:9 யோபு 9:17 யோபு 27:20-23 ஏசா 28:17 ஏசா 30:30 எசே 13:11-14 மத் 7:27 எபிரெ 12:18 |
| 16 | கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும். | சங் 6:10 சங் 9:19 சங் 9:20 சங் 34:5 |
| 17 | யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி, | சங் 35:4 சங் 35:26 சங் 40:14 சங் 40:15 சங் 109:29 |
| 18 | அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக. | சங் 9:16 சங் 59:13 1இரா 18:37 2இரா 19:19 ஏசா 5:16 எரே 16:21 எசே 30:19 எசே 38:23 |