இணை வசன வேதாகமம்

2சாமுவேல் 10

                   
புத்தகங்களைக் காட்டு
1அதன் பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான்.நியா 10:7-9 நியா 11:12-28 1சாமு 11:1-3 1நாளா 19:1-3
2அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயை செய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயை செய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,உபா 23:3-6 நெகே 4:3-7 நெகே 13:1-3
3அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன் ஊழியக்காரரை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள்.ஆதி 42:9 ஆதி 42:16 1கொரி 13:5 1கொரி 13:7
4அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப்பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.லேவி 19:27 1நாளா 19:3 1நாளா 19:4 சங் 109:4 சங் 109:5 ஏசா 15:2
5அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜா, அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான்.யோசு 6:24-26 1இரா 16:34 1நாளா 19:5
6அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஸ்தானாபதிகளை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியரிலும், சோபாவிலிருக்கிற சீரியரிலும் இருபதினாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவினிடத்தில் ஆயிரம்பேரையும், இஷ்தோபிலிருக்கிற பன்னீராயிரம்பேரையும், கூலிப்படையாக அழைப்பித்தார்கள்.ஆதி 34:30 யாத் 5:21 1சாமு 13:4 1சாமு 27:12 1நாளா 19:6 1நாளா 19:7
7அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்.2சாமு 23:8-39 1நாளா 19:8-19
8அம்மோன் புத்திரர் புறப்பட்டு, ஒலிமுகவாசலண்டையிலே போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும் சோபாவிலும் ரேகோபிலுமிருந்து வந்த சீரியரும், இஷ்தோபிலும் மாக்காவிலுமிருந்து வந்த மனுஷரும், வெளியிலே பிரத்தியேகமாயிருந்தார்கள்.1நாளா 19:7
9யோவாபோ இராணுவங்களின் படைமுகம் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதைக் காண்கையில், அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தி,யோசு 8:21 யோசு 8:22 நியா 20:42 நியா 20:43
10மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன் சகோதரனாகிய அபிசாயினிடத்தில் ஒப்புவித்து:
11சீரியர் கைமிஞ்சுகிறதாயிருந்தால் நீ எனக்கு உதவிசெய்யவேண்டும்; அம்மோன் புத்திரர் கை மிஞ்சுகிறதாயிருந்தால் நான் உனக்கு உதவிசெய்ய வருவேன்.1நாளா 19:9-12 நெகே 4:20 லூக் 22:32 ரோம 15:1 கலா 6:2 பிலிப் 1:27 பிலிப் 1:28
12தைரியமாயிரு: நம்முடைய ஜனத்திற்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக் காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.எண் 13:20 உபா 31:6 யோசு 1:6 யோசு 1:7 யோசு 1:9 யோசு 1:18 1சாமு 14:6 1சாமு 14:12 1சாமு 17:32 2நாளா 32:7 நெகே 4:14 எபிரெ 13:6
13யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியர்மேல் யுத்தம்பண்ணக் கிட்டினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.1இரா 20:13-21 1இரா 20:28-30 1நாளா 19:14 1நாளா 19:15 2நாளா 13:5-16
14சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்குள் புகுந்தார்கள்: அப்பொழுது யோவாப் அம்மோன் புத்திரரை விட்டுத் திரும்பி எருசலேமுக்கு வந்தான்.
15தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைச் சீரியர் கண்டபோது, ஒருமிக்கக் கூடினார்கள்.சங் 2:1 ஏசா 8:9 ஏசா 8:10 மீகா 4:11 மீகா 4:12 சகரி 14:2 சகரி 14:3 வெளிப் 19:19-21
16ஆதாரேசர் நதிக்கு அப்பாலிருந்த சீரியரையும் அழைத்தனுப்பினான்; அவர்கள் ஏலாமுக்கு வந்தார்கள்; ஆதாரேசருடைய படைத்தலைவனாகிய சோபாக் அவர்களுக்கு முன்னாலே சென்றான்.2சாமு 8:3-8 1நாளா 18:3 1நாளா 18:5
17அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, ஏலாமுக்குப் போனான்; சீரியர் தாவீதுக்கு எதிராக இராணுவங்களை அணிவகுத்து நின்றார்கள்; அவனோடு யுத்தம்பண்ணுகிறபோது,1நாளா 19:17
18சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரும் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்.2சாமு 8:4 சங் 18:38 சங் 46:11
19அப்பொழுது ஆதாரேசரைச் சேவிக்கிற சகல ராஜாக்களும் தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டு, இஸ்ரவேலரோடே சமாதானம்பண்ணி, அவர்களைச் சேவித்தார்கள். அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் பயப்பட்டார்கள்.ஆதி 14:1-5 யோசு 11:10 நியா 1:7 1இரா 20:1 தானி 2:37

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.