வேதாகமத்தை வாசி

Click to Subscribe

ஏசாயா 15

                   
புத்தகங்களைக் காட்டு
1மோவாபைக்குறித்த செய்தி. இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது.
2அழுவதற்காக மேடைகளாகிய பாயித்திற்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவின் காரணமாகவும் மேதெபாவின் காரணமாகவும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
3அதின் வீதிகளில் சணல்ஆடையைக் கட்டிக்கொண்டு, எல்லோரும் அதின் வீடுகள்மேலும், அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.
4எஸ்போன் ஊராரும் எலெயாலெ ஊராரும் சத்தமிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்வரை கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதம் அணிந்தவர்கள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் பயப்படுகிறது.
5என் இருதயம் மோவாபுக்காக ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்திற்கு ஏறிப்போகிற வழியிலே அழுதுகொண்டு ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் சத்தமிடுகிறார்கள்.
6நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போகும்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமல் போகிறது.
7ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பால் எடுத்துக்கொண்டுபோவார்கள்.
8கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்வரை அதின் அலறுதலும், பெரேலீம்வரை அதின் புலம்புதலும் கேட்கும்.
9தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிகக் கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரச்செய்வேன்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.