| 1 | கோராகின் மகன்களுடைய பாடல் அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது. |
| 2 | கர்த்தர் யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார். |
| 3 | தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா) |
| 4 | என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும், எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்; |
| 5 | சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை உறுதிப்படுத்துவார். |
| 6 | கர்த்தர் மக்களைப் பெயரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா) |
| 7 | எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள். |