வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 54

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும்.
2தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.
3அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)
4இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்; ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.
5அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.
6உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.
7அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.