வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 127

                   
புத்தகங்களைக் காட்டு
1சாலொமோனின் ஆரோகண பாடல் கர்த்தர் வீட்டைக் கட்டாவிட்டால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;
2கர்த்தர் நகரத்தைக் காக்காமல் இருந்தால் காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண்.
3நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரத்துடன் வேலைகளைச் செய்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார்.
4இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
5இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். (6) அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.