வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 125

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் மலையைப்போல் இருப்பார்கள்.
2மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
3நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது.
4கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.
5தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.