| 1 | துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி கர்த்தரிடத்தில் தன் மனவேதனையை தெரியப்படுத்தும் விண்ணப்பம் கர்த்தாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; என்னுடைய கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக. |
| 2 | என்னுடைய ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்கு விரைவாக பதில் சொல்லும். |
| 3 | என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என்னுடைய எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரிந்தது. |
| 4 | என்னுடைய இருதயம் புல்லைப்போல் வெட்டப்பட்டு உலர்ந்தது; என்னுடைய ஆகாரத்தைச் சாப்பிட மறந்தேன். |
| 5 | என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது. |
| 6 | வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன். |
| 7 | நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன். |
| 8 | நாள்தோறும் என்னுடைய எதிரிகள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாகச் சாபம் இடுகிறார்கள். |
| 9 | நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர், உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன். |
| 10 | ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு, என்னுடைய பானங்களைக் கண்ணீரோடு கலக்கிறேன். |
| 11 | என்னுடைய நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். |
| 12 | கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாக நிற்கும். |
| 13 | தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்கு தயவு செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது. |
| 14 | உம்முடைய ஊழியக்காரர்கள் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள். |
| 15 | கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார். |
| 16 | திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்செய்யாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். |
| 17 | அப்பொழுது தேசங்கள் கர்த்தருடைய பெயருக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லோரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள். |
| 18 | பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; உருவாக்கப்படும் மக்கள் கர்த்தரைத் துதிப்பார்கள். |
| 19 | கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும் |
| 20 | தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார். |
| 21 | கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது |
| 22 | சீயோனில் கர்த்தருடைய பெயரையும், எருசலேமில் அவருடைய துதியையும் பறைசாற்றுவார்கள். |
| 23 | வழியிலே என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி, என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார். |
| 24 | அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்; உம்முடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். |
| 25 | நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது. |
| 26 | அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும். |
| 27 | நீரோ மாறாதவராக இருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. |
| 28 | உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்; அவர்களுடைய சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன். |