1 | இசக்காருடைய மகன்கள் தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நான்கு பேர். |
2 | தோலாவின் மகன்கள் ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்களுடைய பிதாக்கள் வம்சத்தலைவர்களும் தங்களுடைய சந்ததிகளிலே பெலசாலிகளுமாக இருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்து அறுநூறு பேர்களாக இருந்தது. |
3 | ஊசியின் மகன்களில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் மகன்கள் மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவர்களாக இருந்தார்கள். |
4 | அவர்கள் முன்னோர்களின் வம்சத்தார்களான அவர்கள் சந்ததிகளில் யுத்தமனிதர்களான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடு இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மனைவிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள். |
5 | இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்கு சகோதரர்களான பெலசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம் பேர்களாக இருந்தார்கள். |
6 | பென்யமீன் மகன்கள் பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர். |
7 | பேலாவின் மகன்கள் எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெலசாலிகளான ஐந்து தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களுடைய வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்திரெண்டாயிரத்து முப்பத்துநான்குபேர். |
8 | பெகேரின் மகன்கள் செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள். |
9 | தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவர்களாகிய அவர்களுடைய சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பெலசாலிகள் இருபதாயிரத்து இருநூறுபேர். |
10 | யெதியாயேலின் மகன்களில் ஒருவன் பில்கான்; பில்கானின் மகன்கள் ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள். |
11 | யெதியாயேலின் மகன்களாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தார்களில் தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களான பெலசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர். |
12 | சுப்பீமும், உப்பீமும் ஈரின் மகன்கள் ஊசிம் ஆகேரின் மகன்களில் ஒருவன். |
13 | நப்தலியின் மகன்களான பில்காளின் பேரன்மார்கள், யாத்தியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள். |
14 | மனாசேயின் மகன்களில் ஒருவன் அஸ்ரியேல்; அவனுடைய மறுமனையாட்டியாகிய அராமிய பெண்ணிடம் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான். |
15 | மாகீர் மாக்காள் என்னும் பெயருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியைத் திருமணம் செய்தான்; மனாசேயின் இரண்டாம் மகன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்கு மகள்கள் இருந்தார்கள். |
16 | மாகீரின் மனைவியாகிய மாக்காள் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள்; இவனுடைய சகோதரனின் பெயர் சேரேஸ்; இவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம் என்பவர்கள். |
17 | ஊலாமின் மகன்களில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் மகன்கள். |
18 | இவனுடைய சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள். |
19 | செமிதாவின் மகன்கள் அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள். |
20 | எப்பிராயீமின் மகன்களில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய மகன் பேரேத்; இவனுடைய மகன் தாகாத்; இவனுடைய மகன் எலாதா; இவனுடைய மகன் தாகாத். |
21 | இவனுடைய மகன் சாபாத்; இவனுடைய மகன்கள் சுத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூரார்களுடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனதால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள். |
22 | அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேக நாட்கள் துக்கங்கொண்டாடும்போது, அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள். |
23 | பின்பு அவன் தன்னுடைய மனைவியிடம் இணைந்ததால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு மகனைப் பெற்றாள்; அவன், தன்னுடைய குடும்பத்திற்குத் தீங்கு உண்டானதால், இவனுக்கு பெரீயா என்று பெயரிட்டான். |
24 | இவனுடைய மகளாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள். |
25 | அவனுடைய மகன்கள் ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய மகன் தேலாக்; இவனுடைய மகன் தாகான். |
26 | இவனுடைய மகன் லாதான்; இவனுடைய மகன் அம்மீயூத்; இவனுடைய மகன் எலிஷாமா. |
27 | இவனுடைய மகன் நூன்; இவனுடைய மகன் யோசுவா. |
28 | அவர்களுடைய சொந்த நிலங்களும், தங்குமிடங்களும், கிழக்கே இருக்கிற நாரானும், மேற்கே இருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாவரையுள்ள அதின் கிராமங்களும் |
29 | மனாசே கோத்திரத்தின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இந்த இடங்களில் இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் சந்ததியர்கள் குடியிருந்தார்கள். |
30 | ஆசேரின் மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி சேராள். |
31 | பெரீயாவின் மகன்கள் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன். |
32 | ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஓத்தாமையும், இவர்களுடைய சகோதரியாகிய சூகாளையும் பெற்றான். |
33 | யப்லேத்தின் மகன்கள் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் மகன்கள். |
34 | சோமேரின் மகன்கள் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள். |
35 | அவனுடைய சகோதரனாகிய ஏலேமின் மகன்கள் சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள். |
36 | சோபாக்கின் மகன்கள் சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா |
37 | பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள். |
38 | யெத்தேரின் மகன்கள் எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள். |
39 | உல்லாவின் மகன்கள் ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள். |
40 | ஆசேரின் சந்ததிகளாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தலைவர்களும் தெரிந்துகொள்ளப்பட்ட பெலசாலிகளும், பிரபுக்களின் தலைவர்களுமாக இருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்பேர். |