வேதாகமத்தை வாசி

Click to Subscribe

1நாளாகமம் 20

                   
புத்தகங்களைக் காட்டு
1அடுத்த வருடம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவ பலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோனியர்களின் தேசத்தை அழித்து ரப்பாவுக்கு வந்து அதை முற்றுகையிட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைத் தோற்கடித்தான்.
2தாவீது வந்து, அவர்கள் ராஜாவுடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து எடையுள்ள பொன்னும் இரத்தினங்கள் பதித்ததுமாகவும் இருந்தது; அது தாவீதின் தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளைப் பொருட்களையும் கொண்டுபோனான்.
3பின்பு அதிலிருந்த மக்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களும், கடப்பாரைகளும், கோடரிகளும் செய்கிற பணியில் பலவந்தமாக உட்படுத்தி; இப்படி அம்மோனிய மக்களின் பட்டணங்களுக்கெல்லாம் தாவீது செய்து, எல்லா மக்களோடு எருசலேமிற்குத் திரும்பினான்.
4அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தர்களோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத சந்ததியர்களில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் அடக்கப்பட்டார்கள்.
5திரும்பப் பெலிஸ்தர்களோடு யுத்தம் உண்டாகிறபோது, யாவீரின் மகனாகிய எல்க்கானான் காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவனுடைய ஈட்டிக் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அளவு பெரிதாக இருந்தது.
6மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே உயரமான ஒரு மனிதன் இருந்தான்; அவனுக்கு ஆறு ஆறு விரலாக இருபத்துநான்கு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாக இருந்து
7இஸ்ரவேலை சபித்தான்; தாவீதின் சகோதரனாகிய சிமேயாவின் மகன் யோனத்தான் அவனைக் கொன்றான்.
8காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவனுடைய வீரர்களின் கையினாலும் இறந்தார்கள்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.